ஆத்மிக பாதை


மன் அரஃப நஃப்ஸஹு ஃபகத் அரஃப ரப்பஹு“
எவன் ஒருவன் தன்னையறிந்தானோ அவன் தன்னுடைய ரப்பாகிய இறைவனை அறிந்து கொண்டான்“
>அஸ்ஸலாமு அலைக்கும்.............

Saturday, November 7, 2009

ஆத்ம ஞான பாடல்கள்

மீம் மாச்சு மீம் மாச்சு
அலிஃபு நெலிஞ்சு மீம் மாச்சு
அஹதலிஃபு மீம்மாச்சு
முஹம்மதென்று பேராச்சு
சிந்திகணும் சிந்திகணும்
சிந்திகணும்
சிந்திகாதோர் சள்ளைகளை
சந்திகணும்

லா இலாஹ இல்லா
ஹுவெ அஸலுதான்
முஹம்மதுர் ரஸுலில்லாஹி
அஸலின் நிழலுதான்
ஆதத்திலே இருந்து தானே
ஹவ்வா வந்தது
அஹதினிலே பிரிந்துதானே
முஹம்மதானது
ஹுவாய் இருந்த வித்து பின்
ஹியாய் திரண்ட முத்து
குவிந்து இருந்த மத்து பின்
மலர்ந்து விரிந்த சத்து
முத்து அந்த முத்து
ஹயாத்துல் கைபார் முத்து
சத்து உயர் சத்து
மஹசூக்கில் ஆன சத்து

சிந்திகணும் சிந்திகணும்
சிந்திகணும்
சிந்திகாதோர் சள்ளைகளை
சந்திகணும்

உம்முல் குரான் நம்மில் உண்டு
எங்கே தெரியுமா
நம்மில் எட்டு மக்காம் ஆன
இடமும் புரியுமா
வேதத்திற்கு தாயும் உண்டு
தெரிந்ததுண்டு மா
ஆதத்திலே வேதம் உண்டு
அறிந்ததுண்டு மா
தாயும் தந்தையும் யாரு
தரித்த விபரம் கூறு
உலகம் உன்னில் உண்டு-நி
உணரு குருவை கண்டு
காய உடல் சூட்சம்
கண்டோர்க்கு நல் மோட்சம்
அப்துல் ஹலீம் மொழியெ
ஆன்மிக சொல் வழியே

சிந்திகணும் சிந்திகணும்
சிந்திகணும்
சிந்திகாதோர் சள்ளைகளை
சந்திகணும்,

Thursday, November 5, 2009

ஆத்ம ஞான பாடல்கள்

என்தனிலே உன்தனை வச்சு
தந்திரமாய் திரையை விட்டு
உந்தியிலே மந்திரம் வைத்த மன்னவா
உன்னை கண்டு கொள்ள கருனை தாரும்
வல்லவா ஹு அல்லவா

அஹது தலத்தின் கீழாலே
நாசிமுனையின் மேலாலே
சொக்கும் பிரகாசம் வீசும் இறைவா உன்
சுயச்சுடரை காண அருள் தலைவா
யா இறைவா

ஹலிலத்துல் குத்ஸி என்னும்
அய்ம் பூத கோட்டைகுள்ளே
ஹக்கனெ உன்தன் அரசாட்சியே
ஆவல் கொண்டென் நானும் காண
காட்சியே


அலிஃப்-லாமு-மிமு என்னும்
விழி எழுத்தின் ஒளி பிளம்பெ
நுரே இலாஹி யாகி என்னிலெ
நிர்க்கும் உன்னை காணச் செய்யும் கண்ணிலே
என் கண்ணிலே

உடலிலே நி இருக்க
உலகில் தேடி நான் இருக்க
அங்க மதில் நி அமைந்த சேதியெ
ஆஸான் உறை அறிவின் மின்னும் ஜோதியெ
நெத்தியின்.மத்தியிலெ
முத்தொளிக்கும் வித்தகனே
தத்துவ தனம் தாரும் சிமானே
தவரில்லாது பாதுகரும் ஈமானை
என் கோமனே

அலிஃப்-லாமு-ஹே-மீம்-தாளு
அய்ந்துயிரினும் மெய்யுயிரெ
சுல்தானுன் நஸிரவான மோட்சமெ
நீ-ரகசியத்தில் உலவும் ஒளி சுட்சமே
அஹது ஆகி அஹமதாகி
ஆலம் இன்ஷான் கோலமாகி
ஆதத்தில் அமைந்த மூலப்பொருலே
கவி அப்துல் ஹலீம் வேண்டுகிறேன்
அருளே
உன் அருளே

Wednesday, November 4, 2009

ஆத்ம ஞான பாடல்கள்

ஆத்ம ஞான பாடல்கள்
சூச்சும மாளிகை மேனி இதில்
சூழிமுனை அறிந்தவர் ஞானி
காயத்தின் மாயத்தை யோசி
கலிமாவை சரத்தினில் வாசி
ஆதியின் ஜோதி உன்னில் கூடுமெ
நீதியின் கோலம் வந்து ஸேருமெ
நா நயம் பேனிட நல்வழி காட்டுமெ

கண்ணில் மின்னும் காவலனை
நம்மில் வாழும் நாயகனை
எண்ணி இலகும் நிலை நாடு
ஏழ்மை யோடு உறவாடு
உடல் பொருள் ஆவி மூன்று
சுடருக்குல் சுடராய் நின்றூ
நிளையானொன் நினைவை நாட்டு
னெறீ இல்லா வாழ்வை ஓட்டு
ஆறறிவும் அறீயா புதிராய்
மரைவில் நின்றே வாழ்ந்திடும்


அரபு எழுத்தின் மரப்பாளே
அங்க உறுப்பை அமைத்தானே
ஹக்கிகத்துல் இன்ஸானாய்
ஆதம் தம்மை படய்தானே
உயிருக்கு உருவம் கொண்டு
உடல் ஆலும் அவனை கண்டு

நினைவாளே கருவை கூட்டி
துனையாக கல்பை தீட்டி
அருள் சுறக்கும் அடியானாக
அப்துல் ஹலீம் கூறிடும்,