ஆத்மிக பாதை


மன் அரஃப நஃப்ஸஹு ஃபகத் அரஃப ரப்பஹு“
எவன் ஒருவன் தன்னையறிந்தானோ அவன் தன்னுடைய ரப்பாகிய இறைவனை அறிந்து கொண்டான்“
>அஸ்ஸலாமு அலைக்கும்.............

Tuesday, October 30, 2012

வஹ்ஹாபிகளின் அட்டகாசம்

இஸ்லாத்திற்கு எதிரான கலாசார படையெடுப்பு
நபிகள் நாயகம் ( ﷺ ்)அவர்களின் பள்ளிவாசல்
விஸ்தரிப்பதற்காக உடைக்கப்பட இருக்கும்
செய்தி முஸ்லிம் உலகத்தை பெரும் கவலையில்
ஆழ்த்தியுள்ளது. 16 இலட்சம்
மக்களுக்கு ஒரே தடவையில் தொழுகை நடத்தும்
வகையில் பள்ளிவாசல் விஸ்தரிக்கப்பட உள்ளதாக
செய்திகள் கூறுகின்றன. “ மஸ்ஜிதுன்
நபவியை விஸ்தரிப்பதில் எவருக்கும்
ஆட்சேபனை கிடையாது இதற்காக
வஹாபி அரசாங்கம் கையாளும் வழிமுறைகள் மக்கள்
மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளதாக
இஸ்லாமிய மரபுரிமைகளுக்கான
ஆய்வு அறக்கட்டளையின் தலைவர்
கலாநிதி இர்பான் அல் அலவி ஆதங்கம்
வெளியிட்டுள்ளார். மஸ்ஜிதுன்
நபவியை விஸ்தரிக்கும் போது செய்யிதனா அபூக்ர்,
செய்யிதினா உமர் றழியல்லாஹ் அன்ஹ_மா போன்ற
பெரும் சஹாபாக்களின் அடக்கஸ்தலங்களையும்
அழிப்பது வஹாபி அரசாங்கத்தின் நோக்கமாகும். 16
இலட்சம் மக்கள் தொழுவதற்காக, 2.1 பில்லியன்
மக்கள் கலிமா மொழிவதற்கு காரணமாக இருந்த
எமது பெரும் ஸஹாபக்களின்
அடையாளங்களை முற்றாக
அழித்துவிடுவதை எவ்வாறு நியாயப்படுத்த
முடியும். மஸ்ஜிதுன் நபிவி பள்ளிவாசலின்
விஸ்தரிப்பு பணிகள் நவம்பர் மாதம்
ஆரம்பமாகிறது.முஹம்மது இப்னு அப்துல வஹாப்
இஸ்லாமிய அடையாளச்
சின்னங்களுக்கு எவ்வாறு “சிர்க்”
என்று முத்திரை குத்தி அவற்றை அழிக்க
ஆரம்பத்தாரோ அன்று முதல் சமூகத்தின்
சாபக்கேடு ஆரம்பித்துள்ளது. ஹந்தக் களத்தில்
அமைந்துள்ள எழு சஹாபாக்களின் பள்ளிவாசல்கள்
அழிந்து போகும் நிலையை எட்டியுள்ளன.
பெருமானார் ( ﷺ ) அவர்களால் அஹ்லுல் பைத்
என்று புகழ்ந்துரைக்கப்பட்ட செய்யிதினா ஸல்மான்
அல் பார்சி றழியல்லாஹ் அன்ஹ் அவர்கள்
அடங்கப்பட்டிருக்கும்
பள்ளிவாசலை சவுதி அரசாங்கம் உடைக்க
ஆரம்பித்திருக்கிறது. ஹந்தக் பகுதியில் ஏழு பெரும்
ஸஹாபாக்கள் அடங்கப்பட்டிருக்கும்
பள்ளிவாசல்கள் படிப்படியாக உடைக்கப்பட்டுவர
ுகின்றன. 1400 வருடங்களாக பேணிப்
பாதுகாக்கப்பட்டு வந்த இந்த
ஏழு பள்ளிவாசல்களும் பூட்டிப்
போடப்பட்டு மூடிவைக்கப்பட்டுள்ளன.
உள்ளே நுழைய யாரும் அனுமதிக்கப்படுவதில்லை.
சவுதி அரசாங்கம் இந்தப் பள்ளிவாசல்களுக்
கு மின்சாரம் வழக்குவதில்லை.
இது பற்றி பேசுவதற்கு எவராலும் பேச முடியாது.
யஸீதின் பரம்பரையின் பிரபலமான சாதனை இது.
ஹஜின் பிரதான அம்சமாக திகழும் ஸபா,
மர்வா மலைகளின் நிலைகள் என்ன? மலைக்
குன்றுகள் குடையப்பட்டு ஏறமுடியாத வகையில்
பூட்டுப் போடப்பட்டுள்ளன. சவுதியில்
எண்ணை முடிந்து விட்டாலும் அந்த நாட்டுக்கு எந்த
வகையிலும் பொருளாதார பிரச்சினைகள்
வந்து விடாது. ஏனென்றால்
எண்ணெய்க்கு அடுத்ததாக
சுற்றுலா துறை சவுதியின் பிரதான வருமான
வழியாக மாறிவருகிறது. இஸ்லாத்தின்
சின்னங்களை அழித்துவரும் வஹாபி அரசாங்கம்
நபி ஸாலிஹ் (அலை) அவர்களின் “ஸமூது”
கூட்டத்தினர் வாழ்ந்த இடத்தை பிரதான
சுற்றுலா மையாக மாற்றியிருக்கிறது.
ஸமூது கூட்டத்தினர் வாழ்ந்த இந்த
இடத்திற்கு செல்லவே வேண்டாம் என்பது நபிகள்
நாயகம் ( ﷺ ்) அவர்களின் மிகக் கண்டிப்பான
உத்தராவாகும். ஏனென்றால்
அல்லாஹ்தஆலா “ஸமூது” சமூகத்திற்கு ஓர் பெண்
ஒட்டகத்தை அனுப்பினான். ஆனால் இந்த
ஸமூது சமூகம் அல்லாஹ்வின் அத்தாட்சியான
பெண் ஓட்டகத்தை கொலைசெய்தார்கள்.
தனது அத்தாட்சியை கொலை செய்தமைக்காக
ஒட்டு மொத்த “ஸமூது” கூட்டத்தை முற்றாக
அழித்து ஒழித்துவிட்டான். ஒரு நாள்
யுத்திற்கு சொல்லும்
போது கண்மணி நாயகத்திற்கு “ஸமூது” கூட்டம்
வாழந்த இடத்தை கடந்து செல்ல நேர்ந்தது.
உடனே பெருமானார ﷺ ் போர்வையால்
தனது முகத்தை மறைத்துக் கொண்டார். அந்த
இடத்தில் ஓய்வு எடுப்பதற்கு எவருக்கும்
அனுமதியளிக்கவில்லை.
அங்கு உணவு உட்கொள்ளவோ,தண்ணீரைப்
பயன்படுத்தவோ அனுமதி அளிக்கவில்லை.
இறைவனின் அடையாளங்களை அழித்த சமூகம்
வாழ்ந்த இடத்திற்கு எவருக்கும் செல்ல வேண்டாம்
என்று பெருமானார் ﷺ உத்தரவிட்;டார்கள். ஆனால்
இன்று “ஸமூது” கூட்டத்தினர் வாழ்ந்த இடம்
சவுதிஅரேபியாவில் மக்கா,
மதீனாவுக்கு அடுத்ததாக கூடதலான சுற்றுலாப்
பயணிகள் செல்லும் இடமாக மாறியுள்ளது.
மஸ்ஸிதுன் நபவியில் உள்ள “ ரியாலுல் ஜன்னா”
வை( சுவர்க்கத்தின் பூங்காவனம்) முற்றாக அழிக்க
வஹாபி அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
பெருமானார் (் ﷺ ) அவர்கள் பிறந்த
வீடு ஒரு நூலகமாக மாற்றப்பட்டுள்ளது.
அன்னை கதீஜா நாயகயின் வாழ்ந்த இடம் மக்காவின்
பொது மலசல கூடுமான மாறியுள்ளது. அஹ்லுல்
பைத்க்கள், உம்முஹாதுல் முஃமினூன்கள்,
ஸஹாபாக்கள், தாபிஈன்கள், இஸ்லாத்தை பாதுகாத்த
இமாம் ஷாமில் போன்ற பெரும் தலைவர்களின்
அடக்கஸ்தலக்கங்கள் இன்று எம்மத்தியில் இல்லை.
கடந்த 1400 வருடங்களாக பாதுகாக்கப்பட்டு வந்த
இஸ்லாமிய அடையாளச்சின்னங்களில்
95சதவீதமானவை (விழுக்காடு) கடந்த
இருபது ஆண்டுகளில் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன.
ஸாலிஹ் அல் உதைமீன், சவுதியின் பிரதம
முப்தி செய்க் அப்துல் அஸீஸ் போன்றவர்கள்
சொன்னதை போன்று மஸ்ஜிதுன் நபவியில் உள்ள
பச்சை நிற குப்பாவும் உடைக்கப்படலாம். அதற்கான
திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.
இஸ்லாத்திற்கு எதிரான சக்திகள் இறைவனின்
மார்கத்திற்கு எதிராக ஆரம்பித்துள்ள கலாசார
யுத்தத்தின் வடிவங்களை வஹாபிஸ அரசாங்கம்
வெளிப்படையாகவும், அமைதியாகவும்
முன்னெடுக்கிறது. முஸ்லிம்களை கலாசார
அடையாளமற்ற ஒரு சமூதாயமாக உருமாற்றினால்
இஸ்லாத்தின் அடையாளமும், தனித்துவமும்
அழிந்துவிடும் என்பதை யூதர்கள்
நன்கு அறிந்துள்ளார்கள். சமூகத்தின் காலாசார
அடையாளங்கள் என்பது நோய் எதிர்ப்புச்
சக்தியை போன்றதாகும். கலாசார
அடையாளங்களை இழந்த எந்த சமுதாயமும்
தீமைகளை எதிர்த்துப் போராடும் தகுதியையும்,
ஆற்றலையும் இழந்துவிடும். அமெரிக்காவின்
செவ்விந்தியர்கள் முதல் 20ம் நூற்றாண்டின்
ஆப்ரிக்காவின் கறுப்பின மக்கள் வரையிலா நீண்ட
பட்டியல் இதற்கான சிறந்த சான்றுகளாகும். கலாசார
அடையாளம் என்ற ஆணிவேர்
இன்று சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. யூத
சியோனிஸத்தின் கோட்பாடுகள்
இன்று வஹாபிஸத்தை எவ்வாறு ஆழ்கிறது என்பதற்கு இது ஒரு சிறு உதாரணம்
மட்டுமேயாகும் ...Thanks To Facebook Friend Afil Nasar,