ஆத்மிக பாதை


மன் அரஃப நஃப்ஸஹு ஃபகத் அரஃப ரப்பஹு“
எவன் ஒருவன் தன்னையறிந்தானோ அவன் தன்னுடைய ரப்பாகிய இறைவனை அறிந்து கொண்டான்“
>அஸ்ஸலாமு அலைக்கும்.............

Thursday, March 25, 2010

ஹஜ்ரத் ஸுல்தானுல் ஆரிஃபின் ஸய்யத் அஹ்மத் கபிர் ரிஃபாயி நாயகம்(ரலி)


ஹிராக் நாட்டில் இல்மிலும் இபாதத்திலும் சிறந்து விளங்கிய ரிஃபாயி குடும்பத்தில் ஸெய்ஹு மன்ஸூர் இப்னு அபுபக்கர் (ரலி) அவர்கள் ஒரு நாள் கனவு கண்டார்கள் அந்த கனவில் மாமதினா நகரின் மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசலில் சில நபிமார்களும் சில அஷ்ஹாபிகளும் சூழ்ந்த சபை நடுவில் தாஹாநபி(ஸல்) அவர் வீற்றிருக்கக்கண்டார் மேலும் நாயகம் (ஸல்) அவர்கள் தனது வலது கையை ஒரு சிறூவரின் தலைமீது வைத்து கொண்டிருன்தார்கள்
அப்போது பெரியார் மன்ஸூர் ரிஃபாயி அவர்களை பார்த்து நாயகம் (ஸல்) கூறினார்கள்.மன்ஸூரெ இந்த சிறுவர் மகத்துவமும் உயர்பதவியும் வாய்ந்தவர் எனது சந்ததியில் உள்ளவர் எனது பிரதிநிதி என் அந்தரங்கமானவர்.இவர் பெயர் அஹ்மத் கபீர் ஆகும்.இவரை யார் நேசிக்கிறாரோ அவரை நான் நேசிப்பேன்.கியாம நாளையில் அவரை என் மன்றாட்டத்தால் காப்பாற்றுவேன்.இவரை பகைத்தவன் என்னை பகைத்தவனாவான் இன்றிலிருந்து நாற்பதாம் நாள் இவர் ஜனனமாவார் என்று கூறினார்கள்.
ஆரிஃபு நாயகத்தின் தந்தை பெயர் ஸெய்யத் அபுல் ஹஸன் அலி இப்னு யஹ்யா(ரலி),ஆரிஃபு நாயகத்தின் தாயார் பெயர் ஆயிஷா பின்த் அபுபக்கர்(ரலி) ஆவார்கள்,இந்த ஆயிஷா அம்மையாருடன் பிறந்தவரெ மன்ஸூர் ரிஃபாயி ஆவார்கள்.ரிஃபாயி நாயகம் அவர்கள் ஹிஜ்ரி 512 ஆம் ஆண்டு ரஜபு பிறை 21 செப்டம்பர் மாதம் ஞாயற்றுகிழமை அன்று வாஸித் என்ற ஊரின் சுற்றுப் புறத்தில் உம்முல் உபைதா நகருக்கு அருகில் ஹஸன் என்ற ஊரில் இவர்கள் பிறந்தார்கள்.இவர்கள் நபிகள் பெருமான் (ஸல்)அவர்களின் 15ஆம் தலைமுறையில் உதித்தவர்கள்.அல்லாஹ்வின் அருளால்=நபிமணி(ஸல்) அவர்கள் முன்னறிவிப்பு செய்து பிரகாரம் அஹமதுல் கபீர் என்று பெயர் சூட்டி அழைத்தார்கள். இவர்கள் = ஷெய்க் அப்துஷ் ஸஃபி அல் ஹர்பூனி அவர்களிடம் குர் ஆன் பயின்று ஹாபிஸ் ஆனார்கள்.
ஸெய்ஹு அலி இப்னு காரி(ரலி)அவர்களிடம் ஸர்பு நஹ்வு ஃபிக்ஹு ஹதீஸ் தப்ஸீர் போன்ற எல்லா கலைகளையும் பயின்றார்கள்.
பின்னர் ஸெய்ஹு அலாவுதீன் அலிய்யில் வாஷிதி(ரலி) அவர்களிடம் முரிது பெற்று இஜாஸத் சனது வாங்கியப்பின் வாசியோகம் முஷாஹிதா முராக்கபா போன்ற இபாதத்கள் கற்றுவந்தார்கள்.அதுசமயம் அஹமத் கபீர்(ரலி) அவர்களுக்கு வயது இருபத்தேழு
பின்னர் தன் தாயின் சகோதரர் ஸெய்ஹு மன்ஸூர் ரிஃபாயி(ரலி) அவர்களிடம் கிலாஃபத் பெற்று இஸ்முல் அஃலதின் தாத்பரியம் பயின்று ரிஃபாயி தரிக்காவை தலைமை ஏற்று நடத்திவந்தார்கள் பின்னர் சில ஆண்டுகள் சென்றதும் அஹ்மதியா என்ற பேர்பெற்ற ஒரு தரிக்கை நிறுவி அதை தன்னை நாடி வருபவர்களுக்கு போதித்து உலகம்யாவும் தீன்கொடி பறக்க பாடுபட்டார்கள்.
அண்ணல் ஸுல்தானுல் ஆரிஃபின் ஸெய்யத் அஹமதுல்கபீர் ரிஃபாயி அவர்கள் வாழ்ந்த பகுதியில் மலைஜாதிமக்கள் அதிகமாயிருந்தனர் அவர்கள் முரடர்களாயும் அழகர்களாயும் இருந்த குர்தியரான இந்த மக்களிடையே தவ்ஹிதின் உணர்வும் இஸ்லாமியா சாந்தியும் இனைந்த வீர உணர்வும் உண்டாகுமாறு திக்ரு ஞான போதனைகள் செய்தார்கள் அந்த மக்களின் வழிதோன்றல்கள் விரைவிலேயே இஸ்லாமிய உலகின் கிலாஃபத்தை ஏற்கக் கூடிய அளவிற்க்கு அல்லாஹுக்காகவும் தன் தரீக்கிற்க்காகவும் தன் உடல் உருப்புகளை வெட்டி வீசவும் தீனுக்காக உயிர் தரவும் துணியும்படி அவர்களை தயார் செய்தார்கள் இதற்காக்க ஒரு புதிய கொடியை உயர்த்தினார்கள் அது சிகப்பு வர்ணமுடையது அதில் ஒரு பிறையும் ஒரு நட்சத்திரமும் போடப்பட்டிருந்தன மேலும்
நபி பெருமான்(ஸல்)அவர்களின் காலத்தில் சிகப்பு கொடி ஒர் இரு தடவைகள் உயர்த்தப்பட்டிருக்கிறது ஆனால் பிறையும் அங்கோண நட்சத்திரமும் கூடிய சிகப்பு கொடியை முறைப்படுத்தி உரிய நிய்யத்துடன் உயர்த்தியவர்கள் ஆரிஃபு நாயகமே ஆவார்கள் பின்னர் இது முஸ்லிம் உலக கலிஃபாவின் கொடியாயிற்று.
பதாயிஹ் என்றால் நீருற்று எனப்படும் ஹஸன் நகரை சுற்றி நீருற்றுகள் சூழ்ந்திருந்ததால் இப்பெயர் உண்டானது என சரித்திரம் கூறூகிறது இந்த ஹஸன் நகரை ஒட்டிய மனிதர்கள் நடமாட்டம் மற்ற காட்டில் நதிகரையில் துறவுவாழ்வில் தரிப்பட்டார்கள் இஷாவுக்கு உலூசெய்து கொண்டே சுபுஹு தொழுகையும் முடித்தார்கள் பசியை மறந்து ஆண்டு கண்க்கில் இறைதியானத்தில் தளைத்திருந்தார்கள் அப்படி உண்ண வேண்டிய அவசியமானால் இலைகளையும் கிழங்குகளையும் திண்று ஒருவாய் தண்ணிர் குடித்துகொள்வதும் உண்டு.மழையையும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பனிரெண்டு ஆண்டுகள் இறை இஸ்கில் மூழ்கினார்கள் என்றும் ஹிகமுர்ரிஃபாயி என்ற கிதாபில் உள்ளதாகவும் மேலும்
இரவும் பகலும் வாழ்க்கை முழுவதும் முட்படுக்கையால் ஜீவிய காலத்தை கடத்திய பெரியொர்களிடம் அவர்கள் அனுபவித்த துன்பத்திற்க்காக மருமை நாளில் இறைவன் மன்னிப்பு கேட்டுகொள்வான் என பெருமான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலம் அவர்கள் கூறியிருக்கிறார்க்கள் என்றும் ஸெய்ஹு ஹஸன் காதிரி அவர்களும் ஆர்.பி.ம்.கனி சேர்ந்து எழுதிய மாபெரும் மகாத்மா ரிஃபாயி ஆண்டகை என்ற நூலில் சொல்லப்பட்டுள்ளதே இந்த அத்தியாயம் ரிஃபாயி ஆண்டகைக்கு வாலிபப் பருவம் எப்பொதும் தனித்தே இருப்பார்கள் துறவு கோலத்தை உணர்த்தும் கிழிந்த ஆடைகள் அணிந்து பசித்தவர்களாக விழித்தவர்களாக கண்ணிர் சொரிந்தவர்களாக இறையச்சத்தால் இதயம் பதறியவர்களாக காணப்படுவார்கள்.
ஊருக்கு அருகே உள்ள காட்டிற்க்கு சென்று விறகுகளை சேகரித்து கட்டி தலையில்தூக்கி வந்து ஏழைகள் விதவைகள் நோயாளிகள் கண்யில்லாதவர்களுக்கு பகிர்ந்து தருவார்கள் இப்படி செய்வது ரிஃபாயி நாயகத்தின் பணியாக இருந்தது அவர்கள் ஃபக்கிராக வாழ்ந்த தால் பல சமயங்களிள் ஏழைகளுக்கு கொடுக்க எதுவும் இருப்பதில்லை என்பதால் இவ்வாறு சிலபோது செய்துவந்தார்கள்.
ஆரிஃபு நாயகமவர்கள் தன் முரிதீன்கள் ஃபக்கிர்கள் கலிஃபாக்கள் போன்றவர்களுக்கு சொல்லும் உபதேசம் யாதனில் கிடைத்ததை புசி இல்லாததற்க்காக கவலைபடாதே சொகுசற்ற உடையே உடுத்து வைக்கோல் விரிப்பிலோ அல்லது தரையிலோ படுத்து உறங்கு நடையுடைபாவனை அமைதியாக இருக்கட்டும் ஃபக்கிர்கள் போன்று அகிகா கல்வைத்த மோதிரம் அணிந்துகொள் என முத்துமொழி பகர்ந்த அவர்கள் ஹிஜ்ரி 578 ஜமா அத்துல் அவ்வல் மாதம் பிறை 22ல் செப்டம்பர் 23 வியாழன் அன்று 66ம் வயதில் ஆத்மா சடலத்தை விட்டு பிரிந்தது இன்னாலில்லாஹி....
நன்றி- இல்முல் இன்ஷான் கிதாப்

No comments:

Post a Comment