ஆத்மிக பாதை


மன் அரஃப நஃப்ஸஹு ஃபகத் அரஃப ரப்பஹு“
எவன் ஒருவன் தன்னையறிந்தானோ அவன் தன்னுடைய ரப்பாகிய இறைவனை அறிந்து கொண்டான்“
>அஸ்ஸலாமு அலைக்கும்.............

Saturday, November 7, 2009

ஆத்ம ஞான பாடல்கள்

மீம் மாச்சு மீம் மாச்சு
அலிஃபு நெலிஞ்சு மீம் மாச்சு
அஹதலிஃபு மீம்மாச்சு
முஹம்மதென்று பேராச்சு
சிந்திகணும் சிந்திகணும்
சிந்திகணும்
சிந்திகாதோர் சள்ளைகளை
சந்திகணும்

லா இலாஹ இல்லா
ஹுவெ அஸலுதான்
முஹம்மதுர் ரஸுலில்லாஹி
அஸலின் நிழலுதான்
ஆதத்திலே இருந்து தானே
ஹவ்வா வந்தது
அஹதினிலே பிரிந்துதானே
முஹம்மதானது
ஹுவாய் இருந்த வித்து பின்
ஹியாய் திரண்ட முத்து
குவிந்து இருந்த மத்து பின்
மலர்ந்து விரிந்த சத்து
முத்து அந்த முத்து
ஹயாத்துல் கைபார் முத்து
சத்து உயர் சத்து
மஹசூக்கில் ஆன சத்து

சிந்திகணும் சிந்திகணும்
சிந்திகணும்
சிந்திகாதோர் சள்ளைகளை
சந்திகணும்

உம்முல் குரான் நம்மில் உண்டு
எங்கே தெரியுமா
நம்மில் எட்டு மக்காம் ஆன
இடமும் புரியுமா
வேதத்திற்கு தாயும் உண்டு
தெரிந்ததுண்டு மா
ஆதத்திலே வேதம் உண்டு
அறிந்ததுண்டு மா
தாயும் தந்தையும் யாரு
தரித்த விபரம் கூறு
உலகம் உன்னில் உண்டு-நி
உணரு குருவை கண்டு
காய உடல் சூட்சம்
கண்டோர்க்கு நல் மோட்சம்
அப்துல் ஹலீம் மொழியெ
ஆன்மிக சொல் வழியே

சிந்திகணும் சிந்திகணும்
சிந்திகணும்
சிந்திகாதோர் சள்ளைகளை
சந்திகணும்,

No comments:

Post a Comment