ஆத்மிக பாதை


மன் அரஃப நஃப்ஸஹு ஃபகத் அரஃப ரப்பஹு“
எவன் ஒருவன் தன்னையறிந்தானோ அவன் தன்னுடைய ரப்பாகிய இறைவனை அறிந்து கொண்டான்“
>அஸ்ஸலாமு அலைக்கும்.............

Saturday, June 12, 2010

ஞானகவி

வழுத்தூரில் மறைந்து வாழும் மகான் ஹஜ்ரத் முஹமத் தாஹிர் ஹசனியுல் காதிரி(ரஹ்) அவர்களின் ஞானகவியிலிருந்து சில வரிகள்

பல்லவி
ஐயே மெத்த சரியே !- சுத்த நான் !
ஐயே மெத்த சரியே ! (ஐயே)

1.தேசிகர் சொன்னபடி
மாசற்ற நிஷ்டையிலே
கூசாமல் நாம்பணிய
மாசுகம் வந்தது காண் !
அது எப்படி ?
வாயிச் சொற்படி ! (ஐயே)

2.சுத்தஞானம் வேண்டுமானால்
பற்று தனை மர்க்கடம்போல்
மற்ற தெல்லாம் அசுத்த ஞானம்
மெத்த மெத்தப் பேச வேண்டாம்
இது சத்தியம் !
இது சத்தியம் ! (ஐயே)

3.கண்டேண் என்ற காட்சி யார் ?
என்றுமுள்ள அகண்ட அறிவு
அண்டமிரண்டும் கோடி யாவும்
ஒன்றாயிச் சமைந்தது
நான் தானே !
தான் தானே !! (ஐயே)

நன்றி--சம்பூர்ண சுயம் பிரகாசம் கிதாப்

No comments:

Post a Comment