ஆத்மிக பாதை


மன் அரஃப நஃப்ஸஹு ஃபகத் அரஃப ரப்பஹு“
எவன் ஒருவன் தன்னையறிந்தானோ அவன் தன்னுடைய ரப்பாகிய இறைவனை அறிந்து கொண்டான்“
>அஸ்ஸலாமு அலைக்கும்.............

Friday, January 14, 2011

ஆஸீக்கு ரஸூல் யார் ?

அஸ்ஸலாமு அலைக்கும் ஆஸீக்கு ரஸூல் யார் ?இந்த கேள்வி பலருக்கு புரிந்திருக்கும் பலருக்கு புரியாமல் இருக்கும் அதாவது நபிநேசர் யார் இதுவே இதன் தலைப்புக்கு அர்த்தம்.எவர் ஒருவர் இந்த உலகத்தில் தாய்,தகப்பன்,மனைவி,மக்கள்,உற்றார் உறவினர் சொத்து சுகம் எல்லாவற்றையும் விட நபியின் மீது நேசம் கொள்வாரோ அவரே ஆஸிக்கு ரஸுல் ஆவார்.அதுமட்டுமல்ல
நமது ஈமானும் அப்பொழுது தான் பரிபூரணம் ஆகும் இது புஹாரி ஷரிஃபில் பதிய்யப்பட்ட ஹதிஸும் கூட ஒரு மனிதனுக்கு ஈமான் பரிபூரணம் ஆனால் தான் அவன் சொல்லும் கலிமாவும்,தொழுகும் தொழுகையும்,நோற்கும் நோன்பும்,செய்யும் ஜகாத்தும்,புனித ஹஜ் பயணமும் ஏன் சிறு நன்மைகளாக இருந்தாழும் கூட அது அல்லாஹ்வின் சமுக்கத்தில் அங்கிகரிக்கப்படும்.நபியின் காலத்தில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை குறிப்பிட கடமைபட்டுள்ளேன் நமது நாயக்கத்தை ஒரு தடவை கூட நேரில் காணாத தபவுத்தாபயி ஹஜ்ரத் உவைஸீல் கர்னைன் (ரலி) அவர்களுக்கு ஒரு செய்தி எட்டப்படுகிறது அதாவது நமது நாயகம் (ஸல்) உஹது போரில் கலந்து கொண்டபொழுது நமது நாயகம் முஹமது (ஸல்) அவர்களின் புனித பற்கள் ஷஹித்தாக்கப்படுகிறது இதை பல மாதங்களுக்கு பிறகு கேள்வியுற்ற உவைஸுல் கர்னைன்(ரலி) அவர்கள் கூரிய கல்லை எடுத்து தனது பல்லை உடைத்துக் கொள்கிறாற்கள்.அவர்களுக்கு சந்தேகம் வருகிறது ஒருவேலை இந்த வரிசை பல்லா இருக்குமோ அல்லது அந்த வரிசை பல்லா இருக்குமோ என்று சந்தேக்கித்தவராக தனது எல்லா பற்களையும் உடைத்து கொள்கிறாற்கள் ஏன் இவ்வாறு தனது அழகிய பற்களை உடைத்துக் கொள்கிறாற்கள் என்று சந்தேகம் வரும் ஏன் என்றால் நமது உயிரினும் மேலான நமது எஜமானார் நாயகம் முஹமத்(ஸல்) அவர்களின் மீது கொண்ட காதல் தான் இவர்களின் பல்லை உடைத்து எறிய செய்தது சகோதரர்களே சிந்தியுங்கள் இந்த சம்பவம் நடந்தது நமது நபிகளாரின் காலத்தில் தான் ஆனால் இதை நமது நாயகம்(ஸல்) கண்டிக்கவோ அல்லது தவறு என்றோ சொல்லவோயில்லை.ஏன் அல்லாஹ்வின் ரஸுலின் மீது நேஸம் என்று வந்துவிட்டால் இந்த அளவு அல்லது அந்த அளவு எல்லைக்குள் வைத்து நேசிக்க முடியாது.சகோதரா நமது தலைவர் அஹ்மதே முஸ்தஃப(ஸல்) அவர்கள் மீது ஒவ்வொருவரும் அவர் அவர்களுக்கு தெரிந்த முறையில் தனது நேசத்தை வெளிப்படுத்தியுள்ளாற்கள் உதாரணமாக நாம் ஹஜ்ரத் உவைஸுல் கர்னை(ரலி) அவர்கள் கொண்ட நேசத்தை பார்த்தோம்.கவித்தை எழுத தெரிந்தவர்கள் நமது அல்லாஹ் ரஸுலின் கொண்ட நேசத்தை மௌலிதுகளாகவும்,புர்தா ஷரிஃப்பாகவும்,வித்ரிய்யா மௌலிது ஆகவும் இன்னும் பல கிதாபுகளகவும் வெளிப்படுத்தினார்கள்.பேச்சாளர்கள் தனது பேச்சுன் மூலம் தனது நேசத்தை வெளிப்படுத்தினார்கள் இது கடலில் ஒரு துளித்தான் பக்கம் அதிகம் ஆகும் என்ற காரணத்தினால் ஒரு சில தான் காட்டியுள்ளேன் சகோதரா உம்மத் உம்மத் என்று தனது வாழ்நாளை சமுக்கத்திற்காக அர்பணித்த நமது உயிரினும் மேலான எஜமானார் முஹமத் (ஸல்) அவர்களின் மீது நேசம் வைப்பதுற்க்கு அளவுகோள் எதுவும் கிடையாது.ரஸுலின் நேஸமே ஈமானின் உயிர்.எனவே அல்லாஹ்விர் பேரோளி நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலம் அவர்களை இந்த உலகத்தில் எல்லாவற்றையும் விட நேசித்து அந்த இஸ்க் என்ற தீ யில் ஃபனாவாக எனக்கும் இதை படிக்கும் உங்களையுயும் ஆஸிக்கு ரஸுல் ஆகும் படி இறைவா நீ அருள்புரிவாயாக ஆமின்...  

3 comments:

  1. மீன் பிடிப்பதற்காக வலை விரிப்பார்கள்
    ஆனால் நீயோ ஒரு மீன்
    எங்கள் மீன் அல் அமீன்
    தப்புவதற்கல்லவா வலை விரித்தாய்
    சிலந்தியே அன்று மட்டும்
    உன் வலை கொசுவலையாக இருந்தது
    சித்தம் மகிழும் செம்மல் நபியின்
    ரத்தம் குடிக்க வந்த
    குரைஷிக் கொசுக்களை
    அண்டாமல் விரட்டியதால்
    அகமது நபியின்
    ஆள் மயக்கும் அழகு கண்டால்
    அகம் அது மயங்கும்
    முகமது நபியின்
    முத்து நிலா முகம் கண்டால்
    மூ உலகும் தான் மயங்கும் என்று
    அவர் முகமது மறைக்க
    ஒரு முத்திரை போட்டாயோ
    நிர்வாண உலகத்திற்கு
    ஆடையாய் வந்தவரைப் பாராட்ட
    பொன்னாடை நெய்து
    போர்த்தினாயோ இல்லை
    குபுரியத்திற்கு (குபுரியம் – இறை மறுப்பு)
    கபன் நெய்யத் தொடங்கினாய்
    - கவிக்கோ அப்துல் ரஹ்மான்

    ReplyDelete
  2. நண்பர் ஆசாத் அவர்கள் மிகவும் அற்புதமாக கவிதை ஒன்றை தனது கருத்தாக வெளிபடுத்தியுள்ளார்கள் நன்றி

    ReplyDelete
  3. Jaffar Sadique,ValoothoorFebruary 17, 2011 at 6:00 PM

    முகமது மலர்ந்திட
    அகமது குளிர்ந்திட
    ஜகமது புகழ்ந்திடும்
    முகம்மது - அகமது
    நபியை, என் கண்மணியை
    நானும் புகழ்ந்திட
    வார்த்தை கொடு
    நாயனே!

    ReplyDelete