ஆத்மிக பாதை


மன் அரஃப நஃப்ஸஹு ஃபகத் அரஃப ரப்பஹு“
எவன் ஒருவன் தன்னையறிந்தானோ அவன் தன்னுடைய ரப்பாகிய இறைவனை அறிந்து கொண்டான்“
>அஸ்ஸலாமு அலைக்கும்.............

Friday, March 25, 2011

முன்னோர்களுக்காக து.ஆ செய்தேனா?


அஸ்ஸலாமு அலைக்கும்
                  முன்னோர்களுக்காக து.ஆ செய்யனுமா என்று எனக்குள் ஒர் கேள்வி எழுந்தது ஏன் எதற்க்காக செய்யனும் என்று என்னை நானே கேட்டேன் அப்போழுது எனக்கு ஒர் சிந்தனை தோன்றியது.இஸ்லாம் எப்போழுது தோன்றியது
நபி ஆதம் அலைஹிவஸ்ஸல்லாம் அவர்களின் காலத்தில் தோன்றியது அப்போழுது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸ்ஸலம் அவர்களின் காலத்தில் தோன்றவில்லையா இல்லை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸ்ஸலம் அவர்கள் முதலாவதாகவும் கடைசியாகவும் தோன்றிய இறைதூதர் ஆவார்கள்.இஸ்லாம் ஆனது ஆதிபிதா ஆதம் அலைஹிவஸ்ஸலாம் அவர்களின் காலத்தில் தான் தோன்றியது அவர்கள் தான் முதன்முதலில் இஸ்லாமிய தாவா செய்தார்கள் இப்படி ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு நபிமார்கள் இஸ்லாத்தை உயிர்பித்து கொண்டு இருந்தார்கள் கடைசியாக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸ்ஸலம் அவர்கள் இஸ்லாத்தை உயிர்பித்து நிலைநிறுத்தி விட்டு சென்றார்கள்.அதன் பிறகே வலிமார்கள் வருகை ஆரம்பித்தது.இதெல்லாம் எதற்க்காக சொல்கின்றேன் என்று கேட்கிறிர்களா காரணம் இருக்கிறது.இது இப்படி இருக்க இந்தியாவில் இஸ்லாம் எப்படி பரவியது.இறைநேஸர்களின் வருகைக்கு பின்னர் தான் இஸ்லாம் இந்தியாவில் பரவியது.எனக்கு தெரிந்து சஹாபி பெருமக்கள் இருவர் தமிழகத்திற்க்கு வந்துள்ளனர் 1.ஹஜ்ரத் உக்காஷா ரலியல்லாஹூ அன்ஹூ மற்றும் 2.ஹஜ்ரத் தமிமுல் அன்ஷாரி ரலியல்லாஹூ அன்ஹூ ஆவார்கள்.இந்தியாவை பொறுத்த வரை ஹஜ்ரத் காஜா முயினுத்தீன் சிஸ்தி அஜ்மிரி ரலியல்லாஹூ அன்ஹூ மற்றும் திருச்சி வாழும் ஹஜ்ரத் தப்லே ஆலம் டோல் சம்மந்தர் ரலியல்லாஹூ அன்ஹூ தஞ்சை மாவட்டம் பொறுத்த வரை குத்புல் வலி ஹஜ்ரத் அஸ்ஸெய்ஹு ஸ முஹமத் வலியுல்லாஹ் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களின் தாவா பணி போற்றுதலுக்குறியது.இறைநேஸ செல்வர்கள் இஸ்லாமிய மார்க்கத்தை நம் முன்னோர்களிடம் எடுத்து கூறிய பொழுது நம்முடைய முன்னோர்கள் இந்து மதத்தில் பல ஜாதி பிரிவினர்களாக கடவுள் என்றால் யார் என்றே தெரியாமல் இஸ்டம்போல் வணங்கி கொண்டு அதுவும் ஒர் பிரிவினரை தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவர்களாக ஆக்கி பல கொடுமைக்கு ஆளாக்கினர் இதற்கெல்லாம் விடிவெள்ளியாக இந்த நாதாக்கள் இஸ்லாத்தை போதித்த பொழுது அதை மனதார அகம் மகிழ்ந்து நம்முடைய்ய முன்னோர்கள் ஏற்று கொண்டனர்.ஏன் இஸ்லாம் என்பது மதம் அல்ல அது மனிதனை செம்மை படுத்துவதற்க்கு உரிய ஓர் மார்க்கம்.ஆத்மிக ரீதியில் சொல்ல வேண்டும் என்றால் தன்னை தானே உணர்ந்து கொள்ளுவதற்க்கு உரிய மார்க்கம் ஆகும்.ஆதலால் தான் இஸ்லாமியர்கள் அனைவரும் ஓர் தாய் மக்களை போல் அன்புடனும்,பாசத்துடனும் வாழ்ந்து வருகின்றனர்.இதர்கெல்லாம் காரணம் யார் நிச்சயமாக அவ்லியாக்கள் தான் அதில் மாற்றம் இல்லை இருந்தாலும் இதை மனதார ஏற்று கொண்டார்கலே நம்முடைய்ய முகம் தெரியாத முன்னோர்கள் அல்லாஹ் அவர்களின் இதயத்தில் ஆத்மிக ஜோதியை மிளிர வைத்தானே அந்த ஒர் காரணத்திர்க்காக யா அல்லாஹ் எங்களுடைய்ய முன்னோர்கள் அனைவரின் பாவத்தைய்யும் மன்னிப்பாயக அவர்களின் மறுமை வாழ்வை சிறப்பானதாக ஆக்குவாயாக.எங்களுடைய முன்னோர்கள் பெரிய சொத்தாகிய இஸ்லாதை எங்களுக்கு விட்டு சென்றுள்ளார்கள் ஆதலால் தான் நாங்கள் இன்று இஸ்லாத்தை பின்பற்றுபவர்களாக கண்ணியமான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றோம் யா அல்லாஹ் இருகரம் ஏந்தி எங்களது இரு கண்கலாழும் இதயத்தாழும் அழுது கேட்கின்றோம் எங்களின் முன்னோர்களின் பாவத்தை மன்னித்து அவர்களின் மறுமை வாழ்வை சொர்க்க பூன்ஜோலையாக ஆக்குவாயாக ஆமின் ஆமின் யா ரப்புல் ஆலமின்......
                      சகோதரர்களே இப்பொழுது புரிந்திருக்கும் நம்முடைய்ய முன்னோர்களுக்காக ஏன் து.ஆ செய்தேன் என்று
                          வஸ்ஸலாம்

No comments:

Post a Comment