ஆத்மிக பாதை


மன் அரஃப நஃப்ஸஹு ஃபகத் அரஃப ரப்பஹு“
எவன் ஒருவன் தன்னையறிந்தானோ அவன் தன்னுடைய ரப்பாகிய இறைவனை அறிந்து கொண்டான்“
>அஸ்ஸலாமு அலைக்கும்.............

Friday, January 22, 2010

ஞானரத்தினக் குறவஞ்சி!

ஞானரத்தினக் குறவஞ்சி
************************************
1.”ஆதிக்கு முன்னம நாதியு மென்னடி சிங்கி?
அந்தக் கருக்குழி முந்த இருளறை சிங்கா.”
ஆதி = ஆ(ன்மா) + தீ(வெப்பம்)
அநாதி = அந்(த)+ ஆதி = அந்தாதி
கரு = எண்ணம், நினைவு, சலனம்
ஆதியாகிய இறைக்கு முன் அநாதி என்பது என்னடி சிங்கி?

அந்தஎண்ணம், சலனம் ஆகியவை தோன்றுமிடமாகிய தலைக்குள்ளே
இருக்கும் கருக்குழிக்கு உள்ளே இருக்கும் இருட்டு அறைதான் சிங்கா!
2. “ஆதியாய் வந்த அரும்பொரு ளேதடி சிங்கி?
சோதியி லாதி சொரூபா யெழுந்தது சிங்கா”
ஆதியிலே வந்த அரிய பொருள்என்னவெனில் சோதியில் ஆதி சொரூபமாம் விந்துவேயாம் .
3.”சோதியி லாதி சொரூபமான தெப்படி சிங்கி? – அது
வேதமாம் முப்பொரு ளொன்றாய் முடிந்தது சிங்கா!”
அதுஎப்படி ஆதி சொரூபமானது சிங்கி?
பதி, பசு, பாசம் ஆகிய முப்பொருளும் ஒன்றாய்ச் சேர்ந்த ஆன்மாவைப்
படைக்கும். ஆன்மா வேதமாம் அறிவை அடையும்.
4.”முப்பொரு ளென்று நீமுன் சொன்ன தாரடி சிங்கி? – அவர
அப்பனு மாயிர மாதியாம் நாமடா சிங்கா!”
முப்பொருளென்று முன்னே சொன்னது யாரடி சிங்கி?
பதி,பசு,பாசம் கூடிய அப்பனும், ஆயியும் ஆயிரம் உயிருக்கு ஆதியாம் நாம்
தானடா சிங்கா.
5.”எப்படி யுலகில் இப்படி யுருவானோம் சிங்கி? – அது
அப்பன் தன் னட்புக்கு ஒப்பியதாலே சிங்கா!”
எப்படி உலகில் இப்படி உருவானோம் சிங்கி?

அப்பனும் ஆயியும் நட்பினால் இணைவவதற்கு ஒப்பியதாலே சிங்கா.
6.”பராப ரத்தினிற் பஞ்சவ னமேது சிங்கி? – அது
வேராகித் தூரான விந்து நிறமடா சிங்கா!”
இந்த உலகினில் ஐந்து வர்ணம்எது சிங்கி?
அது வேராகி, தூரான, ஆதியான விந்துவின் நிறமடா சிங்கா.
7.”ஒன்றுக்குள் ஐவர் உண்டான தெப்படி சிங்கி? – அது
ஒன்றோடே ஒன்றாக ஓடி இணைந்தது சிங்கா.”
ஒரு உடலினுள் ஐம்பூதங்கள் உண்டானது எப்படி சிங்கி?
அவைகள் ஒன்றோடு ஒன்றாக ஓடி இணைந்ததால்தான் உருவாகிய ஒன்று
உடலானது சிங்கா.
8.”மூலக் குகைக்குள்ளே முச்சுடரே தடிசிங்கி? – அது
நாதத்தி லைம்பூதம் நன்பா யுதித்தது சிங்கா!”
ஐம்பூதங்களையும் அடக்கி விந்து நாதத்தில்ஏற்றினால் அதுதான் மூல(கபால)க் குகைக்குள்எரியும் சூரிய, சந்திர, அக்கினி கலைகளல்ஏற்படும் முச்சுடரே
9.”மூலக்கிழங்கு முளைத்திடம் எவ்விடஞ் சிங்கி? – அது
நாதத்திலான நடுநிலையல்லவோ சிங்கா!”
மூலக் கிழங்கு (விந்து) முளைக்குமிடம் எங்கே சிங்கி?
அது விந்து நாதத்தின் நடு(ப்பகுதி) நிலை அல்லவோ சிங்கா. அதுவே
கபாலத்தின் நடுப் பகுதி. ஐம்புலன்களிருந்தும் உள்புறமாகக் கோடுகள்
வரைந்தால் அது உள்நாக்குப் பக்கத்தில் வெட்டும். அந்த இடம்தான் சிங்கா.
10.”மூலக் குகையெனுங் கோட்டைக் கரசர் யார்சிங்கி? – அது
முப்பொருள் ஒன்றாய் முடிந்த நினவடா சிங்கா!”
கபாலக் குகையெனும் மூலக்குகைக்கு அரசர் யாரடி சிங்கி?
பதி, பசு, பாசம் ஆகிய மூன்று பொருட்களும் ஒன்றாய் இணைந்து முடிந்த
“நினைவு” தான் அது சிங்கா.

11.”முன்னே முளையாய் முளைத்திடம் எவ்விடஞ் சிங்கி? – அது
மூளை முனையிரு கண்ணிக ளல்லவோ சிங்கா!”
முதன் முதலில் முளையாய் முளைத்த இடம்எது சிங்கி?

மூளையின் முனையில் கண்ணிகளாய்த் தொங்கிகொண்டிருக்கும்
கண்களடா சிங்கா.
12.”முன்னே யுருவாய் முடிந்திட மெவ்விடம் சிங்கி? – அது
பெண்ணாணு மாகப் பிறந்த தலமடா சிங்கா!”
உருவாகி உடலெடுத்து முடிந்தது எவ்விடம் சிங்கி?

பெண்ணும் ஆணுமாய் பிறக்கும்போது வெளிவரும் இடமடா
(தலமடா) சிங்கா.
13.”இந்த வுடலுக்கு வேரென்ன தூரென்ன சிங்கி? – அது
இந்த வுடலுக் குயிராதி மூலமே சிங்கா!”
இந்த உடலுக்கு ஆரம்பமும் முடிவுமென்ன சிங்கி?

இந்த உடலுக்கு உயிர் ஆதிமூலமே (விந்து சக்தி) சிங்கா.
14.”இந்த வுடலுக் குயிர்வந்த தெப்படி சிங்கி? – அது
தொந்தி நடுக்குழி தொப்பூழ் வழியடா சிங்கா!”
இந்த உடலுக்கு உயிர் வந்ததுஎப்படி சிங்கி?
அம்மையின் வயிற்றின் நடுக்குழியா தொப்பூழ் கொடி வழி வந்ததடா
சிங்கா.
இதன் வழியாக அன்னையின் வயிற்றினுள்ளே பரிபூரணமாயிருந்தது
பிண்டம் மட்டுமே. குழந்தையாக வெளிவந்தவுடன் அன்னையின்
தொப்பூழ் கொடியின்மூலம் அடிக்கும் சிவ்வென்ற மூச்சுக் காத்துதான்
குழவிக்கு உயிர்.
இதை எவ்வளவு எளிதாக விளக்கியுள்ளார் பீரு முகமது அவுலியா.
15.”இந்த உடலுக்கு உயிரெங்கே நின்றது சிங்கி? – அது
அந்தர மாயண்டமாக்கொடி யல்லவோ சிங்கா!”
இந்த உடலுக்கு உயிர்எங்கே நின்றது சிங்கி?
அந்தரத்தில் தொங்கும் முட்டையையும் குழந்தையையும் பிணைக்கும்
கொடி அல்லவோ சிங்கா.
16.”இந்த வுடற்கனி எந்தக் கொடிக்கனி சிங்கி? – அது
முந்திய கொப்பூழு மாக்கொடி யல்லவோ சிங்கா!”
என் உடல்எந்த கொடியின் கனி சிங்கி?
இது முந்திய(உன்தாயின்) கொப்பூழு கொடிதான் சிங்கா.
17.”மாக்கொடி யென்பதை மானிடர்என்சொன்னார் சிங்கி?
மட்டிலடங்காத மாகலி மாவடா சிங்கா!”
மாக்கொடி(தாயின் கொப்பூழ் கொடி) யென்பதை மானிடர் என்ன
சொன்னார் சிங்கி?
கட்டுக்கு அடங்காத நஞ்சுக் கொடிஎன்றார் சிங்கா.
“மட்டிலடங்காத மாகலி மாவடா சிங்கா!”
இதை “மட்டிலடங்காத மா “கலிமா” வடா சிங்கா!”எனக் கூறுவோரும்
உண்டு.
கலிமா :
“லா இலாஹ இல்லல்லாஹூ – முஹம்மதுர் ரஸுலுல்லாஹி.”
18.”எந்த வழியினால் வந்தோ முலகினில் சிங்கி? – அது
எல்லா முடிந்த பொருள்வழி யாமடா சிங்கா!”
எந்த வழியினால் வந்தோ முலகினில் சிங்கி?
அது எல்லா முடிந்த பொருள்வழியாம் (செய்த வினைகளுக்குத்
தக்கவாறு) இந்த உலகினில் வந்தோமடா சிங்கா.
19.”முன்னே அறிவால் அறிவகை என்னடி சிங்கி? – அது
முன்சுடர் மூன்று முடலுயி ராத்துமா சிங்கா!”
அறிவை அறியும் வகைஎன்னடி சிங்கி?
சூரிய, சந்திர, அக்கினிச் சுடர் மூன்றும் சேர்ந்த உடல் உயிர்
ஆத்துமாவால் அறியலாம் சிங்கா.
20.”பின்னே ரறிவர்க ளொன்றான தெப்படி சிங்கி? – அது
பேதகமற்ற பெருவெளி யானது சிங்கா!”
அறிவை உணர்ந்த பின்னே அறிவர்கள் ஒன்றானதெங்கே சிங்கி?
பேதமேயில்லாத சிதாகாசப் பெருவெளியில் சிங்கா.


21.”ஆசைகொண் டுநம்மை யாட்டுவா ராரடி சிங்கி? – அது
அக்கினி வாயுநீர் மண்ணின் மகிமையே சிங்கா!”
ஆசைகொண்டு நம்மை இப்படி ஆட்டிப் படைப்பவர் யாரடி சிங்கி?
ஐம்புலன்களில் ஆகாயம் தவிர எஞ்சி நிற்கும் அக்கினி, வாயு, நீர்,
மண் ஆகியவைதானடா சிங்கா!”
22.”ஆசைபா சப்பலன் அனுபோகம் ஆரடி சிங்கி? – அது
அங்கம் பொருந்திய பங்குமண் அல்லவோ சிங்கா!”
ஆசை, பாசம் முதலியவைகளின் பலன்களை அனுபவிப்பது
(அனுபோகம்) யாரடி சிங்கி?
மண் தத்துவத்தாலாகிய அங்கங்கள் பொருந்திய உடல்தானடா
சிங்கா.
23.”தன்னை அறியுந்தலமேதடி சொல்லடி சிங்கி? – அது
கண்ணிடையான நடுநிலை யல்லவோ சிங்கா!”
தன்னை அறியும் தலம்(இடம்) எதடி சிங்கி?
கண்களிடையேயான ஐம்புலன்களும் சந்திக்கும் இடமேதானடா
சிங்கா.
24.”என்னவிதமாகத் தன்னையறிவது சிங்கி? – அது
தன்னவன் றாய்தந்தை யாகிநா மானது சிங்கா!”
தன்னையறிவது எப்படி சிங்கி?
தன்னுடைய தாய் தந்தையையும் ஆகி, நாமுமாகிய விந்து தானது
சிங்கா.
25.”இறையை அறிவதிங் கெப்படிச் சொல்லடி சிங்கி? – அது
இறையெங்கு நின்றாடுந் தன்நினை வாகுமே சிங்கா!”
இறையை அறிவது எப்படி சிங்கி?
இறை எங்கும் நின்றாடும் தன்னுடைய நினைவுதானடா சிங்கா!
26.”என்னுள் விளங்குந் தவமென்ன சொல்லடி சிங்கி? – அது
தன்னை மறந்து தவத்தி லிருப்பது சிங்கா!”
தவம் என்றால் என்னடி சிங்கி?
உணர்வை நினைவினில் நிறுத்தித் தன்னையும் மற்றவற்றையும்
மறந்து இருப்பதுதான் தவம்.
27.”என்னவிதமாகத் தன்னை மறப்பது சிங்கி? – அது
ஒன்றைப் பொருந்தி ஒடுங்கியிருப்பது சிங்கா!”
தன்னை மறப்பது எப்படியடி சிங்கி?
நினைவில் உணர்வை ஒன்றினால் மனமடங்கும். அந்த ஒடுக்கம்
தன்னை மறக்கச் செய்யும் சிங்கா.
28.”என்னவிதமாக ஒன்றைப் பொருந்தலாம் சிங்கி? – அது
எல்லாம் மறந்து இருளா யிருப்பது சிங்கா!”
ஒன்றைப் பொருந்தும் வழி என்னடி சிங்கி?
எல்லாவற்றையும் மறந்து இருளில் மூழ்கி இருப்பது சிங்கா.
29.”ஒன்றென்று சொன்ன உயர்நிலை என்னடி சிங்கி? – அது
உன்னா லுதிப்பல முன்னால் நினைவடா சிங்கா!”
ஒன்று என்று சொன்ன உயர்நிலை என்னடி சிங்கி?
உயர்நிலை நினைவுதானடா சிங்கா.
30.”கன்னி யெழுந்து கலந்திடம் எவ்விடஞ் சிங்கி? – சில
முன்னியெழுந்த உயிர் நிலை யல்லவோ சிங்கா!”
வாலைக் குமரியாம் மனோன்மணி எழுந்து கலந்தது எந்த இடம் சிங்கி?
அது முதன்முதலில் உதித்த உயிர்நிலையே சிங்கா.


31.எங்கும் பரந்த பெரும் பொருளென்னடி சிங்கி? – அது
அங்கிங்கு மெங்குமாய்க் கண்ட பெருவெளி சிங்கா.
எங்கும் பரந்த பெரும் பொருள் என்னடி சிங்கி?

அது அங்கு, இங்கு எங்குமாய்ப் பரந்த சிதாகாயப் பெருவெளி சிங்கா!
32.அண்ணிணு மெண்ணம் அழியாப் பொருளென்ன சிங்கி – இரு
கண்ணையு மூட இருளழி யாப்பொருள் சிங்கா!
எண்ணமாகிய நினைவு கிட்டினாலும் அழியாத பொருள் என்னடி சிங்கி?

அது கண்களை மூட இருக்கும் இருள்தானடா சிங்கா!
(கன்ஸூல் மஹபியா)
33.ஆங்கார வுடலுக்கு ஆணியா னென்னடி சிங்கி? – அது
ஓங்கார மூலத்தின் உள்ளொளி யல்லவோ சிங்கா!
ஆங்காரம் நிறைந்த உடலுக்கு ஆதாரம்(ஆணி) என்னடி சிங்கி?

அது பிரணவமாம் ஓங்கார மூலத்தின் உள்ளே இருக்கும் ஒளியே
சிங்கா!
34.ஆணியாய் வந்த அரும்பொரு ளென்னடி சிங்கி? – அது
தோணிய சற்குரு முதனாம மல்லவோ சிங்கா!
ஆதாரமாய் வந்த அரும்பொருள் என்னடி சிங்கி?

தோன்றிய சற்குருவின் முதல் பெயரல்லவோ(சீவ) சிங்கா!
35.இந்தப் பொருள் வந்த தெந்த வழியடி சிங்கி? – அது
அந்தக் கதிமதி வந்த வழியடா சிங்கா!
கதி = பிறப்பு; மதி = அறிவு.
இந்த சீவன் வந்தது எந்த வழியடி சிங்கி?

அந்த அறிவு பிறந்து வந்த வழியடா சிங்கா!

2 comments: