ஆத்மிக பாதை


மன் அரஃப நஃப்ஸஹு ஃபகத் அரஃப ரப்பஹு“
எவன் ஒருவன் தன்னையறிந்தானோ அவன் தன்னுடைய ரப்பாகிய இறைவனை அறிந்து கொண்டான்“
>அஸ்ஸலாமு அலைக்கும்.............

Friday, December 14, 2012

Ahle Sunnna Wal Jamaa Youths

அஸ்ஸலாமு அலைக்கும்,
தஞ்சை மாவட்ட சுன்னத் வல் ஜமாத் இளைஞர்களை ஒன்றினைக்கும் சிறு முயற்சியில் இறங்கி உள்ளொம் சுன்னா வல் ஜமா கொள்கையில் பிடிப்பு உள்ளவர்கள்.தங்க­ளது கைபேசி எண் மற்றும் இ..மெயில் முகவரியை இந்த இ மெயிலுக்கு அனுப்பும் படி பணிவுடன் கேட்டுக் கொள்கின்றோம்...­.தொடர்புக்கு miskinshaa@gmail.com


Saturday, November 17, 2012

கர்பலா வின் கண்ணிர் துளிகள் மார்க்க பயான்

இன்ஷா அல்லாஹ் முஹர்ரம் மாதம் ஆகிய இம் மாதத்தில் கர்பலா தியாகிகளை நினைவு கூறும் பொறுட்டு வழுத்துரில் மார்க்க பயான் நடைபெற இருக்கிறது விரைவில் எதிர் பாருங்கள்...


Wednesday, November 14, 2012

ஹிஜ்ரி புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

அஸ்ஸலாமு அலைக்கும்,
                  எனது இஸ்லாமிய நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஹிஜ்ரி புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..இஸ்லாமிய கடைசி மாதம் ஆகிய துல்ஹஜ் மாதமும் இஸ்லாமிய முதல் மாதமாகிய முஹர்ரம் மாதமும் தியாகத்தை நினைவு படுத்த கூடிய மாத மாக இருக்கிறது,இஸ்லாமிய மார்க்கம் பல தியாகங்கள் செய்து தான் வளர்ந்தது...இந்த இனிய நன்நாளிள் இஸ்லாதிற்காக தன் உயிரை தியாகம் செய்த இமாம் ஹஸன் ரலியல்லாஹீ அன்ஹு,இமாம் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு மற்றும் கர்பலா வீர தியாகிகள் மற்றும் அனைத்து இஸ்லாமிய சஹித் மார்கள் அனைவரையும் நினைவு கூற்ந்து..அவர்களுகாக து.ஆ செய்து அவர்கள் அளவுக்கு முடியாவிட்டாலும் நாமும் சிறிய தியாகங்கள் செய்ய வல்ல நாயன் அருள் புரிவானாக...ஆமின்...,


Tuesday, November 6, 2012

வஹ்ஹாபியே பதில் சொல்?

ஒ வஹ்ஹாபியே கப்ரை முத்தம் இடுவது கப்ர் வணக்கம் என்றால்...மனைவியை முத்தம் இடுவது மனைவி வணக்கமா? பெற்ற பிள்ளையை முத்தம் இடுவது பிள்ளை வணக்கமா? பதில் சொல்...


Tuesday, October 30, 2012

வஹ்ஹாபிகளின் அட்டகாசம்

இஸ்லாத்திற்கு எதிரான கலாசார படையெடுப்பு
நபிகள் நாயகம் ( ﷺ ்)அவர்களின் பள்ளிவாசல்
விஸ்தரிப்பதற்காக உடைக்கப்பட இருக்கும்
செய்தி முஸ்லிம் உலகத்தை பெரும் கவலையில்
ஆழ்த்தியுள்ளது. 16 இலட்சம்
மக்களுக்கு ஒரே தடவையில் தொழுகை நடத்தும்
வகையில் பள்ளிவாசல் விஸ்தரிக்கப்பட உள்ளதாக
செய்திகள் கூறுகின்றன. “ மஸ்ஜிதுன்
நபவியை விஸ்தரிப்பதில் எவருக்கும்
ஆட்சேபனை கிடையாது இதற்காக
வஹாபி அரசாங்கம் கையாளும் வழிமுறைகள் மக்கள்
மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளதாக
இஸ்லாமிய மரபுரிமைகளுக்கான
ஆய்வு அறக்கட்டளையின் தலைவர்
கலாநிதி இர்பான் அல் அலவி ஆதங்கம்
வெளியிட்டுள்ளார். மஸ்ஜிதுன்
நபவியை விஸ்தரிக்கும் போது செய்யிதனா அபூக்ர்,
செய்யிதினா உமர் றழியல்லாஹ் அன்ஹ_மா போன்ற
பெரும் சஹாபாக்களின் அடக்கஸ்தலங்களையும்
அழிப்பது வஹாபி அரசாங்கத்தின் நோக்கமாகும். 16
இலட்சம் மக்கள் தொழுவதற்காக, 2.1 பில்லியன்
மக்கள் கலிமா மொழிவதற்கு காரணமாக இருந்த
எமது பெரும் ஸஹாபக்களின்
அடையாளங்களை முற்றாக
அழித்துவிடுவதை எவ்வாறு நியாயப்படுத்த
முடியும். மஸ்ஜிதுன் நபிவி பள்ளிவாசலின்
விஸ்தரிப்பு பணிகள் நவம்பர் மாதம்
ஆரம்பமாகிறது.முஹம்மது இப்னு அப்துல வஹாப்
இஸ்லாமிய அடையாளச்
சின்னங்களுக்கு எவ்வாறு “சிர்க்”
என்று முத்திரை குத்தி அவற்றை அழிக்க
ஆரம்பத்தாரோ அன்று முதல் சமூகத்தின்
சாபக்கேடு ஆரம்பித்துள்ளது. ஹந்தக் களத்தில்
அமைந்துள்ள எழு சஹாபாக்களின் பள்ளிவாசல்கள்
அழிந்து போகும் நிலையை எட்டியுள்ளன.
பெருமானார் ( ﷺ ) அவர்களால் அஹ்லுல் பைத்
என்று புகழ்ந்துரைக்கப்பட்ட செய்யிதினா ஸல்மான்
அல் பார்சி றழியல்லாஹ் அன்ஹ் அவர்கள்
அடங்கப்பட்டிருக்கும்
பள்ளிவாசலை சவுதி அரசாங்கம் உடைக்க
ஆரம்பித்திருக்கிறது. ஹந்தக் பகுதியில் ஏழு பெரும்
ஸஹாபாக்கள் அடங்கப்பட்டிருக்கும்
பள்ளிவாசல்கள் படிப்படியாக உடைக்கப்பட்டுவர
ுகின்றன. 1400 வருடங்களாக பேணிப்
பாதுகாக்கப்பட்டு வந்த இந்த
ஏழு பள்ளிவாசல்களும் பூட்டிப்
போடப்பட்டு மூடிவைக்கப்பட்டுள்ளன.
உள்ளே நுழைய யாரும் அனுமதிக்கப்படுவதில்லை.
சவுதி அரசாங்கம் இந்தப் பள்ளிவாசல்களுக்
கு மின்சாரம் வழக்குவதில்லை.
இது பற்றி பேசுவதற்கு எவராலும் பேச முடியாது.
யஸீதின் பரம்பரையின் பிரபலமான சாதனை இது.
ஹஜின் பிரதான அம்சமாக திகழும் ஸபா,
மர்வா மலைகளின் நிலைகள் என்ன? மலைக்
குன்றுகள் குடையப்பட்டு ஏறமுடியாத வகையில்
பூட்டுப் போடப்பட்டுள்ளன. சவுதியில்
எண்ணை முடிந்து விட்டாலும் அந்த நாட்டுக்கு எந்த
வகையிலும் பொருளாதார பிரச்சினைகள்
வந்து விடாது. ஏனென்றால்
எண்ணெய்க்கு அடுத்ததாக
சுற்றுலா துறை சவுதியின் பிரதான வருமான
வழியாக மாறிவருகிறது. இஸ்லாத்தின்
சின்னங்களை அழித்துவரும் வஹாபி அரசாங்கம்
நபி ஸாலிஹ் (அலை) அவர்களின் “ஸமூது”
கூட்டத்தினர் வாழ்ந்த இடத்தை பிரதான
சுற்றுலா மையாக மாற்றியிருக்கிறது.
ஸமூது கூட்டத்தினர் வாழ்ந்த இந்த
இடத்திற்கு செல்லவே வேண்டாம் என்பது நபிகள்
நாயகம் ( ﷺ ்) அவர்களின் மிகக் கண்டிப்பான
உத்தராவாகும். ஏனென்றால்
அல்லாஹ்தஆலா “ஸமூது” சமூகத்திற்கு ஓர் பெண்
ஒட்டகத்தை அனுப்பினான். ஆனால் இந்த
ஸமூது சமூகம் அல்லாஹ்வின் அத்தாட்சியான
பெண் ஓட்டகத்தை கொலைசெய்தார்கள்.
தனது அத்தாட்சியை கொலை செய்தமைக்காக
ஒட்டு மொத்த “ஸமூது” கூட்டத்தை முற்றாக
அழித்து ஒழித்துவிட்டான். ஒரு நாள்
யுத்திற்கு சொல்லும்
போது கண்மணி நாயகத்திற்கு “ஸமூது” கூட்டம்
வாழந்த இடத்தை கடந்து செல்ல நேர்ந்தது.
உடனே பெருமானார ﷺ ் போர்வையால்
தனது முகத்தை மறைத்துக் கொண்டார். அந்த
இடத்தில் ஓய்வு எடுப்பதற்கு எவருக்கும்
அனுமதியளிக்கவில்லை.
அங்கு உணவு உட்கொள்ளவோ,தண்ணீரைப்
பயன்படுத்தவோ அனுமதி அளிக்கவில்லை.
இறைவனின் அடையாளங்களை அழித்த சமூகம்
வாழ்ந்த இடத்திற்கு எவருக்கும் செல்ல வேண்டாம்
என்று பெருமானார் ﷺ உத்தரவிட்;டார்கள். ஆனால்
இன்று “ஸமூது” கூட்டத்தினர் வாழ்ந்த இடம்
சவுதிஅரேபியாவில் மக்கா,
மதீனாவுக்கு அடுத்ததாக கூடதலான சுற்றுலாப்
பயணிகள் செல்லும் இடமாக மாறியுள்ளது.
மஸ்ஸிதுன் நபவியில் உள்ள “ ரியாலுல் ஜன்னா”
வை( சுவர்க்கத்தின் பூங்காவனம்) முற்றாக அழிக்க
வஹாபி அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
பெருமானார் (் ﷺ ) அவர்கள் பிறந்த
வீடு ஒரு நூலகமாக மாற்றப்பட்டுள்ளது.
அன்னை கதீஜா நாயகயின் வாழ்ந்த இடம் மக்காவின்
பொது மலசல கூடுமான மாறியுள்ளது. அஹ்லுல்
பைத்க்கள், உம்முஹாதுல் முஃமினூன்கள்,
ஸஹாபாக்கள், தாபிஈன்கள், இஸ்லாத்தை பாதுகாத்த
இமாம் ஷாமில் போன்ற பெரும் தலைவர்களின்
அடக்கஸ்தலக்கங்கள் இன்று எம்மத்தியில் இல்லை.
கடந்த 1400 வருடங்களாக பாதுகாக்கப்பட்டு வந்த
இஸ்லாமிய அடையாளச்சின்னங்களில்
95சதவீதமானவை (விழுக்காடு) கடந்த
இருபது ஆண்டுகளில் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன.
ஸாலிஹ் அல் உதைமீன், சவுதியின் பிரதம
முப்தி செய்க் அப்துல் அஸீஸ் போன்றவர்கள்
சொன்னதை போன்று மஸ்ஜிதுன் நபவியில் உள்ள
பச்சை நிற குப்பாவும் உடைக்கப்படலாம். அதற்கான
திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.
இஸ்லாத்திற்கு எதிரான சக்திகள் இறைவனின்
மார்கத்திற்கு எதிராக ஆரம்பித்துள்ள கலாசார
யுத்தத்தின் வடிவங்களை வஹாபிஸ அரசாங்கம்
வெளிப்படையாகவும், அமைதியாகவும்
முன்னெடுக்கிறது. முஸ்லிம்களை கலாசார
அடையாளமற்ற ஒரு சமூதாயமாக உருமாற்றினால்
இஸ்லாத்தின் அடையாளமும், தனித்துவமும்
அழிந்துவிடும் என்பதை யூதர்கள்
நன்கு அறிந்துள்ளார்கள். சமூகத்தின் காலாசார
அடையாளங்கள் என்பது நோய் எதிர்ப்புச்
சக்தியை போன்றதாகும். கலாசார
அடையாளங்களை இழந்த எந்த சமுதாயமும்
தீமைகளை எதிர்த்துப் போராடும் தகுதியையும்,
ஆற்றலையும் இழந்துவிடும். அமெரிக்காவின்
செவ்விந்தியர்கள் முதல் 20ம் நூற்றாண்டின்
ஆப்ரிக்காவின் கறுப்பின மக்கள் வரையிலா நீண்ட
பட்டியல் இதற்கான சிறந்த சான்றுகளாகும். கலாசார
அடையாளம் என்ற ஆணிவேர்
இன்று சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. யூத
சியோனிஸத்தின் கோட்பாடுகள்
இன்று வஹாபிஸத்தை எவ்வாறு ஆழ்கிறது என்பதற்கு இது ஒரு சிறு உதாரணம்
மட்டுமேயாகும் ...Thanks To Facebook Friend Afil Nasar,


Saturday, August 11, 2012

Tuesday, July 10, 2012

வழுத்தூரில் உத்தம நபியின் உதய தின விழா சிறப்பாக கொண்டாடபட்டது



ஹாஜி Lion.A. பஷீர் அஹம்ம்து அவர்கள் மெளலானா மெளலவி K.முஹம்மத் சுலைமான் காதிரி அவர்களுக்கு சால்வை அணிவித்த போது எடுத்த படம்...


மெளலானாமெளலவி K.முஹம்மத் சுலைமான் காதிரி அவர்கள் "நடைமுறை உலகில் நபிகள் நாயகம்(ஸல்)" என்ற தலைப்பில் மிக அருமையாக உரையற்றினார்கள்..

ஹாஜி Lion.A. பஷீர் அஹம்ம்து அவர்கள் தேங்கை சர்புதின் ஹஜ்ரத் அவர்களுக்கு சால்வை அணிவித்த போது எடுத்த படம்...

விழாவில் கலந்து கொண்ட ஜமாத்தார்கள் ஒரு பகுதி...

தேங்கை சர்புதின் ஹஜ்ரத் அவர்கள் அலிஃப் என்ற தலைப்பில் உரையற்றினார்கள்..

ஹாஜி R.கமாலுதீன் பைஜி அவர்கள் வரவேற்புரையற்றினார்..


ஹஜ்ரத் ஹாபிழ் இம்ரன் அவர்கள் கிராத் ஓதி விழவினை தொடங்கி வைத்தார்கள்

ஜனாப் F.அப்துல் கரீம் அவர்கள் விழாவினை தொகுத்து வழங்கினார்..

அஸ்ஸலாமு அலைக்கும்...! 
வழுத்தூரில் மிலாது நபி விழா சிறப்பாக நடைபெற்றது... லுஹர் தொழுகைக்கு பிறகு மௌலுது சரிஃப் ஓதப்பட்டு அஸர்  தொழுகைக்கு பிறகு மார்க்க அறிஞர்களின் பயான் நடைபெற்றது..

ஜனாப் F.அப்துல் கரீம் அவர்கள் விழாவினை தொகுத்து வழங்கினார்..ஹஜ்ரத் ஹாபிழ் இம்ரன் அவர்கள் கிராத் ஓதி விழவினை தொடங்கி வைத்தார்கள். ஹாஜி R.கமாலுதீன் பைஜி அவர்கள் வரவேற்புரையற்றினார்.. தேங்கை சர்புதின் ஹஜ்ரத் அவர்கள் அலிஃப் என்ற தலைப்பில் உரையற்றினார்கள்..
மெளலானாமெளலவி K.முஹம்மத் சுலைமான் காதிரி அவர்கள் "நடைமுறை உலகில் நபிகள் நாயகம்(ஸல்)" என்ற தலைப்பில் மிக அருமையாக உரையற்றினார்கள்..
விழாவில் சுன்னத் ஜமாத் இளைஞர்கள், ஜமாத்தார்கள், சுன்னத் ஜமாத்தினார்கள், பெண்கள், மற்றும் பொது மக்கள் அனைவரும்  கலந்து கொண்டு  சிறப்பித்தனர் இன்ஷா அல்லாஹ் ஓளிப்பதிவு இணைய்யத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்...

Friday, July 6, 2012

மீலாது நபி விழா

தஞ்சை மாவட்டம் வழுத்தூரில் மீலாது நபி விழா வரும் 08-07-2012 ஞாயிறு அன்று அஸர் தொழுகைக்கு பிறகு அலிஃப் பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது உள்ளூர் மற்றும் வெளியூர் ஜமாத்தார்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.....
                                இப்படிக்கு
அஹ்லே சுன்னத் வல் ஜமாத் இளைஞரணி,
                             வழூத்தூர்

Thursday, June 28, 2012

ஹஜ்ரத் மஸ்தான் ஷாஹிப் வலியுல்லாஹ்

வழுத்தூர் ஹஜ்ரத் மஸ்தான் ஷாஹிப் வலியுல்லாஹ் அவர்களின் வருடாந்திர கந்தூரி விழா

அஸ்ஸலாமுஅலைக்கும்…!
வருகிற ஷாபான் பிறை10 30-06-2012 அன்று வழுத்தூர் ஹஜ்ரத் மஸ்தான் ஷாஹிப் வலியுல்லாஹ் அவர்களின் வருடாந்திர ஹந்தூரி நடைபெற உள்ளது.அதுசமயம் உள்ளூர் மற்றும் வெளியூர் ஜமாத்தார்கள் கலந்து கொண்டு எஜமான் அவர்களின் து.ஆபரக்கத்தை பெருமாறு அன்புடன் அழைகின்றோம்…..

Wednesday, February 22, 2012

விஞ்ஞானத்தை வென்ற மெய்ஞ்ஞான மேதை முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (றழி)

முஹையதீன் அப்துல் காதர் ஜீலானீ (ரலி) கந்தூரி நாள் 23-02-2012

மஹ்பூபே சுபுஹானி மஃசூகே ரஹ்மானி மெய்நிலை கண்ட ஞானி கௌதுல் அஃலம் முஹையதீன் அப்துல் காதர் ஜீலானி (ரலி) அவர்களின் நினைவு கந்தூரி 23-02-2012 வியாழன் வெள்ளி இரவு (ரபியுல் ஆகிர் 01) வழுத்தூர் முஹையதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் மஃரிப் தொழுகைக்குப் பிறகு மௌலூது மற்றும் சிறப்பு துவாவுடன் நிகழ்வுறுகிறது.

விஞ்ஞானத்தை வென்ற மெய்ஞ்ஞான மேதை முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (றழி)

அவ்லியாக்களின் அகமியம்


மக்களை நன்மையின் பக்கம் அழைத்து நன்மையை ஏவி தீயதை தவிர்த்து நடக்கும் ஒரு கூட்டம் உங்களில் இருப்பது அவசியம் அவர்கள் தான் வெற்றி அடைந்தவர்கள். (அல்-குர்ஆன்)

அறிந்து கொள்ளுங்கள், நிச்சயமாக அல்லாஹ்வின் அவ்லியாக்களுக்கு பயமில்லை, அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். (அல்-குர்ஆன்)

மேற்படி இரண்டு இறை வசனங்களும், இவ்வுலகத்தில் ஒரு கூட்டத்தினர் இருப்பதாகவும், அவர்கள் தான் வெற்றி பெற்றவர்கள் எனவும், அவர்களுக்கு பயமோ, கவலையோ ஏற்படுவதில்லை. ஆனால் மேற்கூறிய இரண்டாவது திருமறை வசனத்தில் அவ்லியாக்களுக்கும் பயமும், கவலையும் இல்லை என இறைவனே கூறுகின்றான். எனவே அவ்லியாக்கள் எனப்படும் கூட்டத்தினர் அல்லாஹ்வை அறிந்து அவனில் அழிந்தவர்கள் என்பது ​​​தெளிவாகின்றது.

இந்த அவ்லியாக்கள் பற்றி மேலும் கூறினால் “நான்” என்ற நஜீஸை நீக்கி, ஷரீஅத், தரீக்கத், ஹகீக்கத், மஃரிபத் என்ற ஆத்மீகப்படிகளைக் கடந்து ஏகனின் எதார்த்தக் கொள்கையில் வாழ்ந்து அல்லாஹ்வை அடைந்த ஆத்மார்த்த ஞானிகளே அவ்லியாக்கள் எனப்படுகிறார்கள்.

இவ்வாறு உலகில் தோன்றிய அவ்லியாக்கள் அனைவருக்கும் அரசராகத்திகழ்பவர்கள், அல்-குத்புர் றப்பானீ, கௌதுஸ்ஸமதானீ, மஹ்பூபுஸ் சுப்ஹானீ, மஃ{க்குர் றஹ்மானீ, ஸிராஜுல் அஹ்பாப், தாஜுல் அக்தாப், பாஸ{ல் அஷ்ஹப், சுல்தான் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (றழி) அவர்களாகும்.

பிறப்பும், அற்புதங்களும்.

சங்கைக்குரிய ஸெய்யித் அபூ ஸாலிஹ் இப்னு மூஸா என்ற தந்தைக்கும், மாண்புமிகு உம்முல் கைர் பாத்திமா பாரிஹா என்ற தாய்க்கும் ஆத்மீகப் புதல்வராக ஹிஜ்ரி470 ஆம் ஆண்டு புனித ரமழான் முதல் பிறையன்று ஈரானின் ஜீலான் நகரில் முஹ்யித்தீன் ஆண்டகை அவர்கள் பிறந்தார்கள். “குத்பு நாயகம்” என உலக மக்களால் மரியாதையாக அழைக்கப்படுகின்ற முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (றழி) அவர்கள் இவ்வையகத்தில் பிறந்த இரவு நிகழ்ந்த அற்புதங்களை அவர்களது அருமைத்தாயார் பின்வருமாறு விபரிக்கின்றார்கள்.

1) ஸஹாபாக்கள், வலிமார்கள், இமாம்கள், சகிதம் குத்பு நாயகத்தின் தந்தையின் கனவில் தோன்றிய பெருமானார் (ஸல்) அவர்கள், உங்களுக்குப் பிறக்கப்போகின்ற குழந்தை எனது காதலரும், அல்லாஹ்வின் அன்பாளரும் ஆவார்கள் என சுப சோபனம் கூறினார்கள்.

2) “வலிமார்கள்” அனைவரும் உங்கள் மகனுக்கு கீழ்ப்படிந்து நடப்பார்கள். எனவும், அவரது கால் பாதங்களை தங்களது புயங்களின் மேல் சுமந்தோராகவும், இருப்பர் என பெருமானாரைத் தொடர்ந்து ஸஹாபாக்கள் வாழ்த்துக் கூறினர்.

3) அன்று இரவு பிறந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண் குழந்தைகள் குத்பு நாயகத்தின் பொருட்டால் விலாயத்தைப் பெற்றன.

4) மாண்புமிகு நோன்பு தலைப்பிறையன்று குத்பு நாயகம் பிறந்த காரணத்தால் அன்றைய தினம் பால் அருந்த மறுத்து விட்டார்கள்.

5) குத்பு நாயகத்தின் தோள் புயத்தின் மீது பெருமானார் (ஸல்) அவர்களின் புனித பாதங்களைச் சுமந்த அடையாளம் காணப்பட்டது.

இளமைப் பருவம்

சிறு பராயத்தில் தந்தை காலமாகி விட்டதால் அன்னையின் அன்பு பராமரிப்பில் வளர்ந்து வந்தார்கள். அன்னை பாத்திமா இறை நெறியில் சிறந்தவராக இருந்தபடியால் தன் குழந்தையின் உள்ளத்தில் ஈமானின் விதையை நன்றாக விதைத்தார்கள். இதனால் சிறுவர் அப்துல் காதிர் அறிவிலும், ஆற்றலிலும் சிறந்து விளங்கினார். எளிய வாழ்க்கையில் பிரியமுள்ளவராக இருந்த அப்துல் காதிர் இழிவான வாத்தைகளைப் பேசமாட்டார்கள். மற்றைய சிறுவர்களுடன் சண்டையிட மாட்டார்கள். தாயாருடன் சேர்ந்து உரிய நேரத்திற்கு தொழுவார்கள். பிரார்த்தனையில் ஈடுபடுவார்கள். பெரியார்களை அன்புடன் ஸலாம் கூறி வரவேற்பார்கள்.

கல்வி, ஞானம் பெறல்.

ஐந்தாம் வயதில் பாடசாலையில் சேர்க்கப்பட்டார்கள். ஏழாம் வயதில் குர்ஆனை மனனம் செய்தார். பத்தாம் வயதில் “வலித்தனம்” வழங்கப்பட்டதை வானவர் மூலம் அறிந்து குத்பு நாயகத்தின் கல்வித் தாகம் மேலும் அதிகரித்தது. இதனால் ஞான த்தைத் தேடி பக்தாத் நகர் சென்றார்கள். செல்லும் வழியில் திருடர் கூட்டத்தை திருக்கலிமஹ் மொழியச் செய்து புனித இஸ்லாத்தில் இணைத்தார்கள். பக்தாதில் பல துறைகளிலும் கல்வி பயின்று ஆத்மீக உயர்வு பெற்றார்கள். என்றாலும் ஆத்மீகத் துறையில் இன்னும் முன்னேறிச் சென்று “பாதின்” என்னும் அக நிலையை அறியும் பாதையில் ஒரு ஞான குருவை தேடியலைந்து இறுதியில் அஷ்-ஷெய்கு ஹம்மாது (றழி) அவர்களின் சீரடானார்கள்.

இறை வணக்கம் புரிதல்.

“வலித்தனம்” சிறு பராயத்தில் கிடைத்த போதிலும் வல்ல நாயனை தியானம் செய்வதை விட்டுவிடவில்லை. சுமார் இருபத்தைந்து ஆண்டுகள் காட்டில் தனிமையாக தவம் இருந்து இறை தியானத்தில் மூழ்கி வல்ல நாயனைத் து}ய்மைப்படுத்தினார்கள் . கல்வி ஞானத்திலும், உயர் பண்புகளிலும், மக்களுடன் பழகுவதிலும், வானத்தில் மின்னும் ஒளி மிகுந்த நட்சத்திரமாக சுடர் விட்டுப் பிரகாசித்தார்கள். து}க்கத்தை கலைப்பதற்காக இரவில் ஒற்றைக் காலில் நிற்பார்கள். விடியும் வரை ஒரே இரவில் குர்ஆன் முழுவதையும் ஓதி முடிப்பார்கள்.

இஸ்லாத்தின் பால் அழைப்பு.

இவர்களின் சொற் பொழிவுகள் சொல் நயமும், பொருள் நயமும் மிக்கவை. ஐம்பது அல்லது அறுபதாயிரம் மக்கள் கொண்ட பெருங்கூட்டத்தில் இவர்களின் சொற்கள் ஒலி பெருக்கியின்றி கணீர், கணீரென்று தெளிவாகக் கேட்கும். இதனைக் கேட்கும் ஒவ்வொரு உள்ளமும், கவரப்படும். எங்கும் ஒரே அமைதி நிலவும். இவ்வாறு நாற்பதாண்டுகள் வரை நடைபெற்ற சொற் பொழிவுகளால் இலட்சக்கணக்கான மக்கள் பயன் பெற்றனர்.

தத்துவ நுால்கள்.

பேச்சு மூலம் மக்களை புனித இஸ்லாத்தின் பால் அழைத்த குத்பு நாயகம் அவர்கள் பல தத்துவ நுால்களை எழுதியும் அறிவுலகிற்கு அளித்தார்கள். அவற்றுள் சில மிகவும் பிரத்தி பெற்றவைகளாகும்.

1) புதூஹல் கைப் – இது “தஸவ்வுப்” ஞானத் துறையை விளக்கும் நூல்

2) குன்யதுத் தாலிபீன் – இது சரீஅத், தரீக்கத், சம்பந்தமான விளக்க நூல்

3) பத்ஹ_ர் றப்பானீ – இதில் குத்பு நாயகத்தின் 68 சொற் பொழிவுகள் இடம் பெற்றிருக்கின்றன.

இவற்றில் ஒரு உபதேசத்தை மட்டும் இங்கு எழுதிக்காட்டுவது பொருத்தமானதாகும். தோழர்களே, எமக்கிருக்கும் சொற்ப வாழ்க்கை இம்மை, மறுமை பற்றிய நல்ல விடயங்களை பேசவே நேரம் போதாது. அவ்வாறு இருக்க வீண் பேச்சுக்களிலும், வீண் தர்க்கங்களிலும் ஏன் உங்களது பெறுமதியான மூச்சை வீணாக்குகின்றீர்கள். “நான்” என்ற மமதையை உள்ளத்திலிருந்து வேரோடு பிடுங்கி எறிந்துவிடுங்கள். அப்போது தான் தீனின் ஒளி மிக்க வாசல் திறக்கப்படும்.

இவ்வாறு குத்பு நாயகத்தின் ஒவ்வொரு உபதேசங்களும் அமைந்திருந்தன.

இன்றுள்ள அழைப்பாளிகள் போல் வெறுமனே பேச்சு மூலமும், எழுத்து மூலமும் தமது மார்க்கப் பிரச்சாரத்தை நிறுத்தி விடாமல் மனிதனை அல்லாஹ்வின் பக்கம் கொண்டு சேர்க்கக் கூடிய வழி வகைகளை உருவாக்கினார்கள். இதற்காக “காதிரிய்யஹ்” என்னும் தரீக்கஹ்வை நிறுவி அதன் மூலம் “நப்ஸ் அம்மாரா” என்னும் கொடிய எதிரியுடன் ஒரு மனிதன் போராடி அதிலிருந்து தம்மை விடுவித்து இறைவனை அடைவதற்கான பயிற்சியை அளித்தார்கள்.

கறாமத் – அற்புதங்கள்.

நபிமார்களுக்கு “முஃஜிஸத்” என்னும் தன்மை வழங்கப்பட்டிருப்பது போல் வலீமார்களுக்கு “கறாமத்” என்னும் தன்மை வழங்கப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு சொற்களும் “அற்புதம்” என்ற ஒரே கருத்தையே தருகின்றன. இந்த வகையில் அல்லாஹ்வின் அதிகாரிகளான அவ்லியாக்கள் தம் வாழ் நாள் முழுவதும் கோடிக்கணக்கான அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியுள்ளார்கள். அதே போன்று குத்பு நாயகம் அவர்களும் தமது வாழ்க்கையில் பல எண்ணற்ற அற்புதங்களை நிகழ்த்திக்காட்டினார்கள். தற்போதும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். அவற்றில் ஒன்றை மாத்திரம் இங்கு எழுதுவது பொருத்தமானதாகும்.

பிரபல செல்வந்தராக விளங்கிய ஸ்பெயின் வாசி ஒருவருக்கு எல்லாவிதமான செல்வங்கள் இருந்தும் புத்திர பாக்கியம் இல்லாதது பெருங் குறையாக இருந்தது. தமது இக்குறையை நீக்கும் பொருட்டு தனக்குத் தெரிந்த பெரியார்கள் யாவரிடத்திலும் சென்று தனது குறையை முறையிட்டார். ஆனால் அவர் சென்ற அனைவரும் அவருக்கு வழியிலேயே பிள்ளை பாக்கியம் கிடையாது என்ற பதிலையே கூறினர். கடைசியாக “குத்பு நாயகம்” அவர்களிடம் வந்து தனது குறைப்பாட்டைக் கூறினார். உடனே குத்பு நாயகம் அவர்கள் “லவ்ஹை நோக்கிப்பார்த்தார்கள். அவருக்கு குழந்தைப் பாக்கியம் கிடையாது என்பது தெரிய வந்தது.இதனை குத்பு நாயகம் கூறிய போது, எனக்கு எவ்வாறாயினும் குழந்தைப் பாக்கியத்தைத் தந்தே ஆக வேண்டும். என்று மன்றாடி நின்றார்.

உடனே மனமிரங்கிய குத்பு நாயகம் அவர்கள் “அலியே, என்னில் நின்றும் உமக்​கொரு பிள்ளையைத் தருகிறேன். உமது முதுகை எனது முதுகுடன் சேரும். எனது முள்ளந்தண்டிலிருப்பது ஆண் குழந்தை அது உமது இல்லத்தில் பிறக்கும். எமது எல்லாவித இல்முகளுக்கும் அந்தப் பிள்ளையே வாரிசாவார். அவர் எமது நாவாகவே இருப்பார். எவரும் ​வெளிப்படுத்தாத அகமிய இரகசியங்களை எல்லாம் அவர் பகிரங்கப்படுத்துவார்.” என்று ஆசி கூறி அனுப்பி வைத்தார்கள். இதைக் கேட்ட அவரும் சந்தோஷத்துடன் வீடு திரும்பினார். அன்றிரவே அவரது மனைவி கர்ப்பவதியாகி அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அவர்கள் தான் ஏகனின் எதார்த்தக் கொள்கையான ஏகத்துவ தத்துவத்தை பகிரங்கமாகப் பேசிய ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ (றழி) அவர்களாகும்.

திருமணம்.

குத்பு நாயகம் அவர்கள் தமது 51 வது வயதில் திருமணம் செய்தார்கள். இஸ்லாம் அனுமதித்தபடி 4 பெண்களை திருமணம் செய்து மொத்தமாக 49 குழந்தைகளைப் பெற்றெடுத்தார்கள். இவர்களில் 20 ஆண்களும், 29 பெண்களும் ஆவர்.

மறைவு

90 ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்ந்த குத்பு நாயகம் அவர்கள் தனது 91 ஆம் வயதில் தொடர்ச்சியாக இரண்டு மாதங்கள் நோயுற்றிருந்தார்கள். அவர்கள் மரணமான அன்றிரவு குளித்து மணம் பூசி இஷாத் தொழுகையைத் தொழுதுவிட்டு மிக நீண்ட நேரம் ஸஜதாவில் இருந்தார்கள். உலக மக்களுக்காக பிராத்தனை புரிந்தார்கள். இருதியாக “லா இலாஹ இல்லல்லாஹ_” என்ற திருக்கலிமாவை மொழிந்தவராக ஹிஜ்ரீ 561 ரபீஉனில் ஆகிர் மாதம் பதினோராம் நாள் இம்மாய உலகை விட்டும் மறைந்து “தாறுல் பகாவை” அடைந்தார்கள். “இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.”

அன்னாரின் புனித ஸியாரம் ஈராக் நாட்டின் பக்தாத் மா நகரில் அமைந்துள்ளது. எனவே நாமும் அவர்களது புனித ஸியாரத்திற்க்குச் சென்று அவர்களின் அன்பையும், ஆசியையும் பெறுவோமாக! ஆமீன்!

Thanks To Zubair Ahmed (Valoothoor)

Wednesday, February 15, 2012

Holy Flags Islathil Punitha Kodigal

Holy Flags Islathil Punitha Kodigal
இஸ்லாமிய மக்கள் கொடி ஏதுவதா கூடாதா என்று நினைபவர்கள் கொஞ்சம் இந்த கிதாபை படித்து பயன் பெறுங்கள்......

வழுத்தூர் நான்கு கொடி ஹந்தூரி விழா

முஹையதீன் அப்துல் காதர் ஜீலானீ (ரலி) கந்தூரி விழா 23-02-2012
அஸ்ஸலாமு அலைக்கும் தஞ்சை மாவட்டம் வழுத்தூரில் மெய் நிலை கண்ட ஞானி ஹஜ்ரத் முஹைய்யத்தீன் அப்துல் காதிர் ஜிலானி ( ரலி ) அவர்களின் நினைவுநாள் 23-02-2012 ( ரபியுல் ஆகிர் 01) வியாழக்கிழமை வெள்ளிக்கிழமை இரவு வழுத்தூர் முஹையதீன் ஆண்டவர் பெரிய பள்ளிவாசலில் மஃரிப் தொழுகைக்குப் பிறகு மெளலூது மற்றும் துவா ஓதி சிறப்பிக்கப்படுகிறது..... ஜமாத்தார்கள் அனைவரும் கலந்து கொண்டு எஜமான் அவர்களின் து . ஆ பரக்கத்தை பெருமாறு அன்புடன் அழைகின்றோம்...
Thanks To www.alifboys.blogspot.com

Thursday, February 2, 2012

வழுத்தூர் வாசியால் வெளியிடப்பட்ட கிதாப் பிரிடிஷ் நூலகத்தில்



அஸ்ஸலாமு அலைக்கும் வழுத்தூரில் வாழ்ந்த ஆத்மஞானி முஹமத் தாஹிர் ஹஸனியுல் காதிரி ரஹ்மத்துல்லாஹ் அலைஹி அவர்களாள் வெளியிடப்பட்ட பழமையான கிதாப் பிரிடிஷ் நூலகத்தில் வைக்கபட்டுள்ளது அனைவரும் பார்க்கவும்.....

வழி தவற மாட்டீர்கள்

நபி (ஸல்) அவர்கள் " ஜனங்களே! எனக்குப் பின்னால் நீங்கள் வழி தவறி விடாது இருக்க உங்கள் மத்தில் நான் இரண்டு விடயங்களை விட்டு செல்கிறேன். அவற்றை நீங்கள் பற்றிப் பிடித்து இருக்கும் காலம் வரை ஒருபோதும் வழி தவற மாட்டீர்கள்.அவைகள் அல்லாஹ்வின் அல் குரானும் எனது குடும்பத்தினருமாகும்." என்று சொல்வதை நான் கேட்டேன்.
(ஆதாரம்- அத் திர்மிதி ஐந்தாம் பாகம் - பக்கம் 328 )