ஆத்மிக பாதை


மன் அரஃப நஃப்ஸஹு ஃபகத் அரஃப ரப்பஹு“
எவன் ஒருவன் தன்னையறிந்தானோ அவன் தன்னுடைய ரப்பாகிய இறைவனை அறிந்து கொண்டான்“
>அஸ்ஸலாமு அலைக்கும்.............

Thursday, November 5, 2009

ஆத்ம ஞான பாடல்கள்

என்தனிலே உன்தனை வச்சு
தந்திரமாய் திரையை விட்டு
உந்தியிலே மந்திரம் வைத்த மன்னவா
உன்னை கண்டு கொள்ள கருனை தாரும்
வல்லவா ஹு அல்லவா

அஹது தலத்தின் கீழாலே
நாசிமுனையின் மேலாலே
சொக்கும் பிரகாசம் வீசும் இறைவா உன்
சுயச்சுடரை காண அருள் தலைவா
யா இறைவா

ஹலிலத்துல் குத்ஸி என்னும்
அய்ம் பூத கோட்டைகுள்ளே
ஹக்கனெ உன்தன் அரசாட்சியே
ஆவல் கொண்டென் நானும் காண
காட்சியே


அலிஃப்-லாமு-மிமு என்னும்
விழி எழுத்தின் ஒளி பிளம்பெ
நுரே இலாஹி யாகி என்னிலெ
நிர்க்கும் உன்னை காணச் செய்யும் கண்ணிலே
என் கண்ணிலே

உடலிலே நி இருக்க
உலகில் தேடி நான் இருக்க
அங்க மதில் நி அமைந்த சேதியெ
ஆஸான் உறை அறிவின் மின்னும் ஜோதியெ
நெத்தியின்.மத்தியிலெ
முத்தொளிக்கும் வித்தகனே
தத்துவ தனம் தாரும் சிமானே
தவரில்லாது பாதுகரும் ஈமானை
என் கோமனே

அலிஃப்-லாமு-ஹே-மீம்-தாளு
அய்ந்துயிரினும் மெய்யுயிரெ
சுல்தானுன் நஸிரவான மோட்சமெ
நீ-ரகசியத்தில் உலவும் ஒளி சுட்சமே
அஹது ஆகி அஹமதாகி
ஆலம் இன்ஷான் கோலமாகி
ஆதத்தில் அமைந்த மூலப்பொருலே
கவி அப்துல் ஹலீம் வேண்டுகிறேன்
அருளே
உன் அருளே

No comments:

Post a Comment