ஆத்மிக பாதை


மன் அரஃப நஃப்ஸஹு ஃபகத் அரஃப ரப்பஹு“
எவன் ஒருவன் தன்னையறிந்தானோ அவன் தன்னுடைய ரப்பாகிய இறைவனை அறிந்து கொண்டான்“
>அஸ்ஸலாமு அலைக்கும்.............
Showing posts with label வழுத்தூர் நான்கு கொடி ஹந்தூரி விழா valoothoor four flag handoori function. Show all posts
Showing posts with label வழுத்தூர் நான்கு கொடி ஹந்தூரி விழா valoothoor four flag handoori function. Show all posts

Sunday, February 2, 2014

வழுத்தூர் நான்கு கொடி ஹந்தூரி

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி, வ பரக்காத்துஹு..!
தஞ்சை மாவட்டம் வழுத்தூரில்
மஹ்பூபே சுபுஹானி மஃசூகே ரஹ்மானி மெய்நிலை கண்ட
ஞானி கௌதுல் அஃலம் முஹையதீன் அப்துல் காதர்
ஜீலானி (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்களின் நினைவு நாள்
கந்தூரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அஸர்
தொழுகைக்கு பிறகு மெளலிது ஷரீப் ஓதப்பட்டது.மக்ரீப்
தொழுகைக்கு பிறகு துவா ஓதப்பட்டு சுமார்
1500படி சாப்பாடு ஆக்கி வழுத்தூர் வாசிகளுக்கு மற்றும்
ஏழைகளுக்கு தப்ருக் வழங்கப்பட்டது. பக்கீர்மார்களின் ராத்தீப்பு மஸ்லீஸ்
உடன். நான்கு கொடி இரவு 10.00 மணிக்கு அரம்பமானது.
நான்கு கொடியினை இளைஞர்கள் வழுத்தூர் உள்ள
அனைத்து வீதிகளின் வழியாக சென்று சுமார் மதியம் 1.00
மணியளவில் நான்கு கொடி வழுத்தூர் முஹைய்யத்தீன்
ஆண்டவர்கள் பெரிய பள்ளிவாசலில் வந்தடைந்தது. அதன்பின்
கொடியினை ஏற்றி, பாத்திஹா ஓதி தப்ருக் வழங்கப்பட்டது.
கடந்த வருடத்தை விட இந்த வருடம் மக்கள் அதிகமாக
கலந்து கொண்டனர்.

Wednesday, February 15, 2012

வழுத்தூர் நான்கு கொடி ஹந்தூரி விழா

முஹையதீன் அப்துல் காதர் ஜீலானீ (ரலி) கந்தூரி விழா 23-02-2012
அஸ்ஸலாமு அலைக்கும் தஞ்சை மாவட்டம் வழுத்தூரில் மெய் நிலை கண்ட ஞானி ஹஜ்ரத் முஹைய்யத்தீன் அப்துல் காதிர் ஜிலானி ( ரலி ) அவர்களின் நினைவுநாள் 23-02-2012 ( ரபியுல் ஆகிர் 01) வியாழக்கிழமை வெள்ளிக்கிழமை இரவு வழுத்தூர் முஹையதீன் ஆண்டவர் பெரிய பள்ளிவாசலில் மஃரிப் தொழுகைக்குப் பிறகு மெளலூது மற்றும் துவா ஓதி சிறப்பிக்கப்படுகிறது..... ஜமாத்தார்கள் அனைவரும் கலந்து கொண்டு எஜமான் அவர்களின் து . ஆ பரக்கத்தை பெருமாறு அன்புடன் அழைகின்றோம்...
Thanks To www.alifboys.blogspot.com